Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

நாட்டார் தெய்வங்கள்

நாட்டார் தெய்வங்கள் – அறம் சார்ந்து வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள்

எது என் மரபு ? எது என் வழிபாடு ? யார் எனது கடவுள் ? என் வாழ்வியல் முறைக்கு சற்றும் பொருந்தாத வழிபாட்டுமுறையை நோக்கி ஓடச் செய்வது எது ? என் வேண்டுதல்கள் ஏன் வேறு மொழியில் மொழிபெயார்க்கப்பட வேண்டும் ? சாமி கும்பிடுவதில் கூட ஒரு fashion , நகரத்துவம் ஏன் ? நான் ஏன் கடவுளை தொடக்கூடாது ?

என் முன்னோர் வாழ்ந்த வாழ்க்கை தானே இலக்கியங்கள் ஆனது ? சரி வென்றவன் வாழ்வே இலக்கியம் என்றாலும் தோற்றவன் வாழ்வை நாட்டுப்புற பாடல்கள், கதைகள் கூடவா சொல்லி விடாது ? அனைத்துக் கேள்விகளுக்கும் தமிழ் இலக்கியங்கள் பதில்சொல்லும்தானே.

வழிபாடு எப்படி தொடங்கியிருக்கும்? தெய்வங்கள்  எப்படி உருவாகி வளர்ச்சி பெற்றிருக்கும்?

பயமே கடவுள் !! பின் அப்பயத்தை போக்கும் சக உயிர் கடவுள் !! வாழ வழி சொன்னவன் கடவுள் ! ஆபத்தென்றால் ஓடிவந்து உதவியவன்  கடவுள் ! எனக்காக தன்னை வருத்திக்கொண்ட மறுஉயிர் கடவுள் ! மற்ற உயிர்களின் மீது காட்டும் பாசம், உரிமை, அக்கறை, கேட்கும் மன்னிப்பு இவற்ற்றுக்கெல்லாம் காரணமாக மூலம் “அன்பே” கடவுள்

 தனது வலிமை மற்றும் சிந்தனைகளுக்கு மீறிய இயற்கை நிகழ்வுகளை மனிதன் வணங்கத் தொடங்கினான், சூரியன், நெருப்பு, மழை,சில விலங்குகள்  இயற்கை வழிபாடு, இவ்வகையில் மனிதனின் அச்ச உணர்வே வழிபாட்டை தொடக்குகிறது.

தன்னைவிட வலிமை வாய்ந்த, தன்னால் செய்யமுடியாத செயல்களை செய்த மனிதர்களை வழிபடத்தொடங்கினான் முன்னோர் வழிபாடு , இவ்வகையில் ஒருவித ஆச்சரியமும், பாதுகாப்பும், குற்ற உணர்வும் அதிலிருந்து விடுபடவும் வழிபாடு நீள்கிறது. அம்மனிதனுக்கு தேவையான விருப்பமான பொருட்களை படைப்பதன் மூலம் அந்த தெய்வதை சாந்தப்படுத்த, குற்ற உணர்விலிருந்து விடுபட, மகிழ்ச்சிப்படுத்த “படையல்” தொடங்குகிறது. அம்மனிதர்கள் மரத்தில் தெய்வமாகவோ, பேயாகவோ குடிகொள்வதாக நினைத்து மரவழிபாடு தொடங்கியது.

அவ்வகையில் முதலில் தோன்றிய தெய்வம்  ஆணா ? பெண்ணா ? மதங்கள் என்ன சொல்கிறதோ தெரியவில்லை. ஆனால் வரலாற்று ரீதியில் தன்னுடனே திரியும், தன்னைப்போலவே சாப்பிட்டு, தூங்கும் ஒரு சக மனிதன் தோற்றத்தில் சற்று வித்தியாசமாக இருந்தாலும் திடீரெண்டு தன்னைப்போலவும், அதனைப்போலவும் சக மனித குட்டிகளை உருவாக்குகிறது என்றால், அந்த குட்டிகளை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வளர்க்கிறது என்றால், தன்னைக் காட்டிலும் குட்டிகளுக்கு உணவு சேர்க்கவே விரும்புகிறது என்றால் இந்த எந்த செயல்களையும் தன்னால் செய்யமுடியவில்லை என்றால் நம்மில் நம்மை விட உயர்ந்த சக்திகளையும் செயல்களை செய்யும் இதுவும் ஒரு தெய்வம் தான் என்று  உருவான முதல் மனித தெய்வம் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என தீர்க்க்கமாக நம்புகிறேன் .

மனிதன் நிலையாக குழுவாக ஓரிடத்தில் வாழதொடங்கிய பின், அந்த குழுவை (குலத்தை, ஊரை, நில எல்லையை ) பிற குழுவிடமிருந்தோ விலங்குகளிடமிருந்தோ காக்க சாகசம் புரிந்த ஆண்கள் சமயத்தில் சில பெண்களும் தெய்வங்களாக வழிபடப்பட்டனர். இவையே காவல் தெய்வங்களாகவும், எல்லைச்சாமிகளாகவும், குல, இன, ஊர் தெய்வங்களாகவும் இருக்கின்றன.

எந்த குழு வலிமையாக வளமாக பரந்து விரிந்து ஆதிக்கம் செலுத்துகிறதோ அந்தகுழுவின் தெய்வம் நாட்டார் தெய்வங்களிலேயே பொது தெய்வமாக வலுப்பெறுகிறது.

 • இவ்வாறு வாழ்வின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும், தெய்வமும் தம்முள் ஒருவராய் கொண்டாடும்படியாக இருந்த தெய்வம் எப்படி ஒரு நிறுவனமாக, அதிகார மையமாக, மாறுகொள்கிறது?
 •  இன்றைய பெருந்தெய்வங்கள், அன்றைய தெய்வங்களை சிறு தெய்வங்களாக்கி தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது எப்படி? 
 • தெய்வத்துக்கு சக்தியை, தொழிலை வரையறுப்பதன் வழி கும்பிடும் தெய்வத்தை ஆதிக்கம் செய்யும் உத்தி என்ன? 
 • தன் வழிபாட்டு முறைக்குள் நாட்டார் தெய்வங்களை “மேல்நிலையக்க (sanskritization) ” செய்ததன் வழி மக்களின் ஏற்றத்தாழ்வு எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது ? 
 • ஆலயநுழைவு ஏன் இன்றும் சமூகஉரிமையை நிலைநாட்டும் அடையாளமாக உள்ளது?
 • அவ்வாறு மேல்நிலையாக்கம் செய்ய உடன்படாத நாட்டார் தெய்வங்களும், மக்களும் என்ன ஆனார்கள் ? எவ்வாறு நடத்தப்பட்டார்கள் ?
 • மேல்நிலையாக்கம் பின்பற்றாத குழுக்கள் தங்களை இந்த பெரும்பான்மை குழுக்களிடம் இருந்த காப்பாற்றிக் கொள்ள பின்பற்றிய பிற நடைமுறைகள் நிறுவனங்கள் என்ன ?

மேற்சொன்ன அனைத்துக் கேள்விகளுக்கும் விடை இன்று நாம் பின்பற்றும் சமயமுறை என்பது நாம் அறிவோம். நோக்கம் இந்த சமய முறையை குறைகான்பதை விட நாட்டார் தெய்வங்களை அறிவதே ! புரிவதே !

நான் ஏன் நாட்டார் தெய்வங்களை விரும்புகிறேன் ?

 • அந்த தெய்வம் என்னைபோன்றே பிறந்து இறந்தது.நான் வாழ்ந்த நிலத்தில் தான் வாழ்ந்திருக்கிறது.
 • தெய்வம்எண்ணப் போன்று இரு கை கால்களுடனே இருக்கும்.பயத்தை எல்லாம் கண்ணை உருட்டி விழிப்பது, நாக்கை மடித்துக் காட்டுவது, அரிவாள் கத்தி எனக் கொள்வது, நாய், பாம்பு என சில விலங்குகளை கொள்வது
 • வாழ்க்கையில் எதாவது பிரச்னை என்றால் மட்டும் உதவி செய்யும்,எதாவது தப்பு செய்தால் தட்டி கேட்டு தண்டனை தரும்.அவ்வளவே அதன் சக்தி. என்னை ஆக்கி காத்து அழிப்பதேல்லாம் அந்த தெய்வமில்லை.
 • நான் என் சாமியை தொட்டு வழிபட முடியும். பூசாரியை இருந்தால் பார்ப்பேன், இல்லைஎன்றால் நானே பூசை செய்ய முடியும். என் வேண்டுதலை என் கடவுளுக்கு எனக்கு புரியாத மொழியில் சொல்ல இடையில் ஒரு ஆள் தேவைஇல்லை.
 • என் தெய்வத்தின் வரலாறு என்ன என எதவது ஒரு பாடல் இருக்கும் அல்லது ஒரு கதை இருக்கும், அதை தெரிந்து கொள்ள தனியாக எதையும் நான் படிக்கவோ, படித்துச்சொல்ல தனியாக ஒரு ஆளோ தேவையில்லை.
 • முக்கியமாக சாமிக்கு தீட்டு என்று யாரும் இல்லை. எதாவது தப்பு செய்தவனை தவிர.நல்ல நாள் கெட்ட நாள் என்று ஏதுமில்லை.
 • நட்டார் தெய்வங்கள், பெரிய கட்டிடம் கோபுரம் கும்பாபிஷேகம் எல்லாம் கேட்காது. நடுகல்லாகவோ, களிமண்ணாகவோ கீற்றுக்கொட்டகையில் இருந்து கொள்ளும், நான் முன்னேறி செல்வம் சேர்ந்தால் தனக்கு என்ன வேண்டுமோ சாமியாடி கேட்டுப் பெற்றுக் கொள்ளும்.
 • வாரத்துக்கு ஒரு, வேளைக்கு ஒரு பூஜை எல்லாம் கேட்காது. வருடத்துக்கு ஒரு முறை எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும்பூஜை செய்தால் போதும். மற்ற நாட்களில் நம் விருப்பம்.
 • பக்தியின் உச்சம் பெரும் அமைதியுடன் கடும்தியானம்அல்ல.பெரும் ஆரவாரத்துடன் உடுக்கைக்கோ, பறைக்கோ ஆடும் ஆட்டம், பக்தியின் உச்சத்தில் மது வேண்டும், மாமிசம் வேண்டும் என்று கூட சொல்லும் வாய். ஏன் கெட்ட வார்த்தை கூட பேசும். “சாமியாடுதல்” என்று பெயர்.

இது போதாதா. இன்றைய மதநிறுவனங்களால் கட்டமைக்கப்பட்ட தெய்வங்களுக்கும் வழிபாடுகளுக்கும் முற்றிலும் எதிர் நிலை. புரட்சி அல்ல. இது தான் நம் அன்றாட முந்தைய வழிபாட்டு முறை.

யாரெல்லாம் கடவுள் ஆனார்கள் ?

 • செயற்கரிய செயல்கள், வாழ்வாங்கு வாழ்ந்த உதாரணமான மனிதர்கள்
 • எதிரிகளிடமிருந்து நாட்டை காக்க தியாகம் செய்த வீரர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்து கொண்ட எளிய மனிதர்கள்
 • தாய் அல்லது தந்தைக்கு சமாதி
 • திருமணமாகாமல் இறந்த பெண்கள். அவலத்திற்கு, கருணைக்கு, வீரத்திற்கு,  அறத்திற்குமான சிறந்த சாட்சிகள்.
 • நாட்டைசிறப்பாக ஆண்ட மன்னர்கள் குளம் இனம் கடந்த போது தெய்வங்களாக
 •  வீட்டுதெய்வம் 
  • குலதெய்வம்
   • இனதெய்வம்
    • ஊர்தெய்வம்
     • பொதுதெய்வம் 

 ஒரு குடும்பத்துக்கு இயல்பில் குறைந்தது மூன்று தெய்வங்கள் வழிபடும் தெய்வங்கலாகின்றன. ஊரின் மூலதெய்வம், ஊரின் காவல் தெய்வம் குலதெய்வம்,

இந்த தெய்வங்களின் வரலாறுகள், வழிபாடுகள் உணர்த்தும் செய்தி ஒன்று தான். அறம் சார்ந்த மேம்பட்ட வாழ்வை வாழ்வதோடு தம்மை சுற்றியுள்ள மனிதர்களின் வலியறிந்து தியாக விட்டுக்கொடுக்கும் மனதுடன் எதிர்கால சந்ததிகளுக்கு உதாரனமான ஒரு வாழ்வை வாழ வேண்டும்.அவ்வகை சிறந்த மனிதர்கள் கடவுளுக்கு நிகராக போற்றப் படுவார்கள் என்பதே.

இத்தகைய மக்களை காக்கும் தெய்வங்கள் sanskritization வழி பெருந்தெய்வங்களுக்கு காவல் தெய்வமாக மாறிப்போனது எவ்வாறு ? வழிபாட்டு முறைகள் கூட மாறிப் போனேதேன் ?

நாட்டார் தெய்வங்கள் : சாமியாடுதல் – உளவியலும் உண்மையும்

நாட்டார் தெய்வ வழிபாட்டு ஆன்மிகம் பக்தி என்பதை தாண்டி ஒரு பண்பாட்டு அடையாளம், ஒரு குடும்பத்தின் வரலாற்று நீட்சிக்கு இன்றியமையா காரணி எனும் பார்வையின் வழியே புரிய விரும்புகிறேன்.

ஏன் குலதெய்வவழிபாட்டைஉயர்த்திப்பிடிக்க விரும்புகிறோம் ?

இரத்த உறவுடைய பங்காளிகள் தொன்றுதொட்டு வழிவழியாக வணங்கும் தெய்வம், அந்த தெய்வம் முன்னோராகவோ, ஒரு பொது தெய்வமாகவோ இருக்கலாம்.தெய்வம் என்பது இங்கு ஒரு குறியீடு மட்டுமே. அந்த பரம்பரையின் வளத்திற்கேற்ப அந்த தெய்வத்தின் ஆலயம் இருக்கும்.

இந்த குலதெய்வத்தை வழிபடும் குடும்பங்களுக்கிடையே திருமணஉறவு இருக்காது.வேற்று குலத்திலிருந்தே பெண்கள் திருமணம் செய்யப்படவேண்டும்.இதை ஆணாதிக்கம் என்று சொல்வதற்கில்லை. முக்கியமான அறிவியல் கோட்பாடான ஜீன் மற்றும் கலாசார பன்மைத்துவத்தை ஒரு குலத்தில் ஏற்படுத்தும் ஏற்பாடு.குலதெய்வமே குடும்பத்தில் நடக்கும் அணைத்து சுபகாரியங்களுக்கும் முன்னிலை எனக்கொள்ளப் படுகிறது. என அதனை குறிக்கும் பொருட்டு அணைத்து அழைப்பிதழ்கள், வாங்கும் வாகனங்கள் என அனைத்திலும் “குலதெய்வ சாமி துணை ” என்று “துணை”யிடும் வழக்கம் உள்ளது.
பெரும்பாலும் பூசை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இருக்கும். உலகமயமாக்கல் காரணமாக உலகின் எந்த மூலையில் குலதெய்வ பூஜைக்கு இந்த வருடம் இல்லையென்றாலும் அடுத்த வருடமாவது தவறாது கலந்து கொண்டே ஆக வேண்டும்.இந்த தங்கள் பூர்வீகத்தை, தன் வரலாற்றை, தன் உறவினார்களை அறியும் தொடர்பில் இருக்கும் ஒரு get-together.

பெண்கள் அல்லது குலத்தின் பெரியவர்களே பூசை செய்வார்கள். பிடித்தமான உணவுகளே படையல் பொருள்கள், அவை அன்றாட உணவுபொருள்களிலிருந்து கறிவிருந்து, மீன்குழம்பு, மது, சுருட்டு ஆகவும் இருக்கலாம்.

உலகாளும் தெய்வங்களை வாங்குவதை விட குலம்காக்கும் தெய்வங்கள் வழிபடபடுவது முக்கியம் என்கிறேன். பிற்போக்குத்தனமாகவோ ஒரு ஆன்மீகதேடலுக்காக பேசவில்லை. ஒவ்வொரு மனிதனும் தன் பூர்வீகம் என்ன தன் குடும்ப வரலாறு என்ன, தன் உறவினார்கள் யார் என தெரிந்துகொள்வதாக குலதெய்வ வழிபாடு அவசியம் என்கிறேன்.

எங்களின் குலதெய்வம் “கருப்பண்ணசாமி”. வேதாரண்யம் வட்டம் கரியாப்பட்டினம்-உம்பளச்சேரி வழியில் புல்வெளி எனும் கிராமத்தில் வயல்வெளிகளுக்கு நடுவே.

கருப்பண்ண சாமி ஒரு காவல் தெய்வம். தோற்றம் பற்றியான கதைகள் பலவகையான செவிவழி கதைகள்.சில புராண கதைகளும் உண்டு.விக்கிபீடியாவில் அடிப்படை தகவல்கள் உள்ளன

வழிபாட்டு முறைகளில் முக்கியமானது பெண்கள் அல்லது குலத்தின் பெரியவர்களே பூசை செய்வார்கள். பிடித்தமான உணவுகளே படையல் பொருள்கள், கருப்பண்ணசாமியை பொறுத்தவரை அவர் “சாஸ்தா ஐயனாரின், (ஐய்யப்பன் ) நண்பர் என்பதாலோ இவர் பக்கா சைவம். பல குலதெய்வங்களுக்கு அன்றாட உணவுபொருள்களிலிருந்து கறிவிருந்து, மீன்குழம்பு, மது, சுருட்டு ஆகவும் இருக்கலாம்.

உடுக்கை போன்ற ஆவேச இசை முழங்க கூட்டத்தில்ஏதனும் ஒரு நபர் ஆவேசம் கொண்டு ஆட்டமே இங்க பக்தியின் உச்சம். அப்போது பலர் தாங்கள் தங்கள் குடும்பத்தில் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு கருப்ப சாமியிடம் உத்தரவு கேட்பர்.

இங்குதான் முக்கியமான விவாதபொருள் ? சாமியாடுவதை நம்புவதா ? அவரிடம் கேட்டு முடிவெடுப்பது சரியா ?

இது முற்றிலும் அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயமே. ஜோதிடம் நம்புவது ஒரு வகை. இது ஒரு வகை. அவ்வளவே. உண்மையில் சாமி தான் வந்து ஆடுகிறது என்று எவரும் நம்புவதில்லை. சாமியாடுபவரே அதை நம்பமாட்டார். 

 • மக்களோடு மக்களாகவே இருக்கும் ஒரு நபர் அந்த சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை, ஒவ்வொரு  குடும்பத்தின் பிரச்சனைகளை நன்கு உணர்ந்திருப்பார். அதன் நோக்கி அவருக்கு சொல்ல வேண்டிய கருத்துக்களும் பார்வைகளும் இருக்கும். சில பொதுவில் சொல்ல தயங்கும், தனியில் நேரே சொல்ல தைரியமில்லாத அல்லது சங்கடமான செய்திகளும் இருக்கும். ஒரு வேளை  சாதாரனமாக அறிவுரை சொன்னால் சொல்பவரை எடை போட்டு அவர் சொல்லும் செய்தியை அலட்சியப்படுத்துவர்.அந்த செய்தியை சொல்ல வேண்டிய சந்தர்ப்பமாக சிலர் பயன்படுத்துவர். கேட்கும் கேள்விகளும் சொல்லும் பதில்களும் இலைமறை காயாகவே இருக்கும்.
 • பெரும்பாலும் பெண்களே அதிகம் சாமியாடுவார்கள். அடக்கப்பட்ட உணர்வுகள், முடக்கப்பட்ட அலட்சியப்படுத்தப் பட்ட அவரது கருத்துக்கள் மற்றும் அறிவுரைகள். அவற்றை வெளிப்படுத்தும் தருனாமாக இதனை கொள்வர்.
 • சிலர் இசையால் உணர்ச்சிவசப் பட்ட, நிலவும் ஒரு வித ஆவேச சூழலில் அமைதியாக இருக்கமுடியா வண்ணம் உந்தப்பட்ட நபர் அந்த ஆவேசத்தை கட்ட முயலும் ஒரு வகையினர். இவர்கள் ஒரு வித இசை ஆர்வலர்கள் மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள்  எனக் கொள்ளலாம்
 • பொதுவில் ஒருவர் சில தவறுகளை செய்துவிட்டு எந்த தண்டனையும் பெறாமல் உலவிக் கொண்டு இருப்பர்.அவருக்கு தண்டனை கொடுக்க விரும்பும் ஒரு எளிய மனிதர், அல்லது சாட்சி அல்லது பாதிக்கப்பட்ட நபர் அவரை எச்சரிக்க, தண்டனை கொடுக்க பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு.
 • தான் கடவுளின் தீவிர பக்தன் என்று தன் பக்தியின் உச்ச நிலையை பிறருக்கு உணர்த்த செய்யும் தருணம், அதன் மூலம் சில் நிமிடம் அணைத்து மக்களும் நம்மை அங்கீகரிக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு உண்மையாக சில நம்பிக்கைஅளிக்கும்சிலவார்த்தைகளை சொல்ல வேண்டும் எனும் பொறுப்புணர்வு.

இப்படி சக குடும்பங்கள்,சக மனிதர்களுக்கு சொல்ல விரும்பும் செய்திகளை, உணர்சிகளை, கோபத்தை, எச்சரிக்கையை, அறிவுரையை வெளிப்படுத்தும் “authorized” நம்பதன்மையான வழியே “உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சாமியாடி சொல்லும் முறை”

சாமியாட தேவையான அடிப்படை தகுதி

 • சமூகத்தின் நிகழ்வுகள் மாந்தர்களின் பிரச்சனைகள் பற்றிய அடிப்படை தெரிதல் மற்றும் புரிதல்
 • இசைக்கு உணர்ச்சிவசப்படும் தன்மை
 • முக்கியமாக நேர்மை, தனி மனித விருப்பு வெறுப்பு அற்ற நிலை 
 • இலைமறை காயாக தனிப்பட்ட பிரச்சனைகள் குறித்து அந்த தனிநபரிடம்  உரையாடும் திறமை
 • முடிந்தவரை நம்பிக்கை அளிக்கும் வார்த்தைகள். தவறு செய்திருந்தால் இலைமறையாக எச்சரிக்கும் திறன்

சாமியாடும் எவரையும் மக்கள் உண்மையில் சாமி தான் வருகிறார் என்று நினைப்பதில்லை. சாமியாடுபவரின் பக்தி எனவே உணர்வுகளுக்கு மதிப்பளித்து உச்சபட்சமாக குறி கேட்டு திருநீர் பெறுவதும் குறைந்த பட்சமாக தாங்கிபிடித்து தண்ணீர் கொடுப்பதோடு முடிந்துவிடும்.சாமியாடுபவர் நேர்மையாக இல்லை என தெரிந்தால் மக்கள் அமைதியாய் இருப்பதை பார்த்தே சாமி விரைவில் மலையேறிவிடுவதோடு 😉 இனி மறுவருடமெல்லாம் வராது.சாமியாடுபவரின் வாக்குகள் மறுமுறை அவர் சாமியாடும் போது மக்களின் மதிப்பு வெளிப்படுகிறது. ஓவரா அட்ட்ராசிடி செய்யும் சாமிகளை எல்லாம் மக்கள் புறக்கணிப்பையும் காண்கிறேன்.

சாமியாடுபவரின் வாக்குகளை நம்புவதெல்லாம் அவரவர் விருப்பம் என்றாலும் அதுவும் வழிபாடுகளில் ஒரு அங்கம் தான் என்றும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கும் வரை   இருந்துவிட்டு போகட்டும் ஜோதிடம் போல என அங்கீகரிக்கவே முயல்கிறேன்.

இவ்வாறு இரவு முழுவதும் செல்லும் வழிபாடு நடைபெறுகிறது.

மேலும்…. தொடரும்