Flash குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

ஆய் நாடு

ஆய்க்குடியை தலைநகரமாக கொண்டு #தென்_பொதிகை ஆட்சி செய்த ஆய் அண்டிரன் சங்க கால மன்னனைப் பற்றிய கட்டுரை.

சங்க காலம் என்பது கிமு ஆறாம் நூற்றாண்டில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்தது.

கடை ஏழு வள்ளல்கள்

கடை ஏழு வள்ளல்கள்
1பேகன் (வையாவிக் கோப்பெரும் பேகன்)

2 பாரி ( வேள் பாரி) ,
3 காரி (மலையன் திருமுடி காரி),
4 #ஆய் (ஆய் அண்டிரன்) ,
5 அதிகன் (அதியமான் நெடுமான் அஞ்சி),
6 நள்ளி (கண்டீரக் கோப் பெருநள்ளி),
7ஓரி (வல்வில் ஓரி)

கடை ஏழு வள்ளல்கள் – ஆய் அண்டிரன்

குறுந்தொகை – 84

சிறுபாணாற்றுப்படை – 95-99

புறநானூறு – 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 138, 139, 140, 158, 240, 241, 258, 374, 375

அகநானூறு – 69

நற்றிணை – 167, 237

பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்க்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் ஆய்வேள் என்றும் மன்னன் ஆய் ஆண்டிரன் என்றும் குறிப்பிடப்பட்டார். இவர் பெயராலே ஆய்க்குடி என அழைக்கப்பட்டது பிற்காலச் சோழர்களின் காலத்தில் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தையும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியிருந்தது ஆய்நாடு. ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஆய்க்குடி கேரளா ஒரு பகுதியாக இருந்தது மற்றும் இன்று வரைக்கும் ஆய்க்குடி பாலசுப்பிரமணியம் கோவில் கன்னியாகுமரி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை உள்ளது.

குறிப்பு: புறநானூறு 132 ,134

கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆண்டிரன் ஆய்க்குடியில் வாழ்ந்த, ஆண்ட குறுநில மன்னன் ஆய் ஆண்டிரன் ஆண்ட பகுதி என்பதால் ஆய்க்குடி எனும் பெயர் அமைந்ததாக இலக்கியங்களால் அறிகிறோம். சங்க இலக்கியங்கள் நற்றிணை (167) குறுத்தொகை (84) அக நானூறு (69,152,198) புறநானூறு (127,136,240-41) ஆகிய நூல்களில் ஆய் ஆண்டிரன், ஆய்க்குடி என்னும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நாகம் நல்கி மகாலிங்க, ஆலமர் செல்வதற்க்கு கொடுத்தவன் ஆய் என்று சிறு பாணாற்றுப் படை (96-99) கூறுகின்றது. இவை அனைத்தும் ஆய்க்குடி என்று பெயர் வந்ததற்கும் ஒரு சாட்சி சான்றாக திகழ்கின்றது என்பது உண்மை.

ஆய்க்குடியும் புறநானூறும்
தொகுப்பு

புறநானூறு 132, 144 போன்ற பகுதிகளில் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் வேள் ஆய் அண்டிரன் மீது பாடிய பாடலில்

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி அயல தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான் தோய் இமயம் தென் திசை ஆஅய்குடி இன்றாயின் பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகம்”

பாடல் விளக்கம்

இந்த உலகம் நிலையாக நிற்க வட திசையில் உள்ள இமயமும், தென் திசையில் உள்ள பொதியமும் (ஆய்க்குடி)தான் காரணம். வட திசை இமய மலையில் கவரி மான்கள் நரந்தைப் புல்லையும் நறுமணம் உடைய மற்ற புல்லையும் மேய்ந்து விட்டு பெண் மான்களுடன் தகர மர நிழலில் தூங்கும்.

முன்னொரு காலத்தில் ஆய்க்குடியில் இயற்கை வளம், நாகரிகம், பண்பாடு மற்றும் ஆன்மீக போன்றவை இமையமலைக்கு இணையாக உள்ளது என்பதை புறநானூறு நூல்கள் விளக்குகிறது .https://youtu.be/tqg4IQeZ-zs konar kotram youtube