Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன.

கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்” போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம்,
ஆடுகளை இடையர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த இடையர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக

மழைக்காலங்களில் ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கள்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு கம்புல ஒத்தைக்காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.”

இந்த நிகழ்வு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இடையர்களும் இவ்வாறுதான் நின்றவாறு தூங்கினர் என்று கருதத் தோன்றுகிறது. ஏனெனில்,
பணடைய அரசர்கள் காலத்திலிருந்து நாம் காணும் கோயிற் சிற்பங்களில் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையர் ஒருவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டற்போல் நீண்டதொரு மறைப்புடன் நின்றவாறு தூங்கிக்கொண்டிருப்பதாகச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் எடுத்த ஒளிப்படங்களில் இவ்வாறான சிற்பங்கள் உள்ள படங்கள் இரண்டு என் சேர்ப்பில் இருந்தன. ஒன்று, ஹம்பியில் பார்த்த ஒரு சிற்பம். மற்றொன்று தாரமங்கலம் கோயிலில் பார்த்த ஒரு சிற்பம். அவற்றை இங்கு பகிர்கிறேன்.

இடையர் விழதுகள்

கோனார் கொற்றம்

உறையூர் நாச்சியார்கோவில் கோபுரத்தில் இந்தச் சிலையுள்ளது.

இடைச்சியர் மோர்விற்பது எல்லா தமிழ் இலக்கியங்களிலும் காண்கிறோம். தமிழில் கலம்பகங்களில் இடைச்சியர் பாடல்வரும்
காளமேகம் கண்ட அனுபவம் சுவையானது. மோரில்லாமல் நீர்போல இருந்ததை வாங்கிக் குடித்தபின் பாடியுள்ளார்:

    காரென்று பேர்படைத்தாய் ககனத்து உறும்போது
    நீரென்று  பேர்படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
    வாரொன்று மென்னகிலார் ஆய்ச்சியர்கைப் பட்டதற்பின்
    மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.