Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே

அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே,மனிதன் தனது நாகரீக வளர்ச்சியை பல்வேறு பருவங்களாக பகுதிபடுத்தும் போது, முதல் பருவ நாகரீகத்தில் நீர்நிலைகளின் ஆதாரத்தை சுற்றி வாழத்துவங்கியவன்,பின் ஆடையணிந்து, நெருப்பை கண்டறிந்து, ஊமை மொழிகளோடு கூட்டம் கூட்டமாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து திரிந்துள்ளான்.அன்றைய தமிழகத்திலும் இவ்வாறு காடு, மலை என்று சுற்றித்திரிந்த ஒரு சிறுகூட்டம், நாகரீக மாற்றத்தில் தன் வழக்காடு சமிஞ்கைகளுக்கும், உடல்மொழிக்கும், ஒலி வடிவம் கொடுத்து தன் கூட்டத்திற்கு மட்டுமே பொருள் புரியும் அவனது வாய்மொழி ஓசைகளுக்கு எழத்துருவம் தொகுத்து, அதற்கு “தமிழ்” என்று பெயரிட்டு, வாழ்ந்து வந்த அன்றைய தமிழகத்தின் அந்த சிறுக்கூட்டம், இன்று உலகம் முழுவதும் 9 கோடியாக விரிந்து, ஈராயிரம் ஆண்டுகள் தொண்மையான தன் மொழியையும் அதன் இலக்கிய மற்றும் வாழ்வியல் நெறிகளையும், தலைமுறை தலைமுறையாக கடந்து, இன்றும் தன் சந்ததிகளுக்கு கொண்டுசெல்லும் பெருமைமிகு தமிழ்க்குடி தாங்கிகளுக்கும், அதன் ஐந்தில் ஒரு பங்கு மக்களான முல்லை நிலத்து மாந்தர்களுக்கு அன்பான வணக்கம்,அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரது தினசரி ஓட்டமும்,தேவையும் ஒரு சாண் வயிற்றுக்கு ஒரு படியளவு சோற்றுக்காகத்தான், அந்த சோற்றை தரும் களிமண் என்ற கருவறை, தனக்கு தேவையான சக்தியை தானே உயிர்பித்து, தனது “பயிர்வித்துக்களையும்” செழிப்புற்று வளரச்செய்யும் ஆற்றலை இயல்பிலேயே தன்னிடத்தே கொண்டது, இந்த களிமண் என்ற கருவறையை “அதிக விளைச்சல்,புதியபரிமாணம்” என்று கூவிய போலி வணிகர்களை நம்பி என்னற்ற இரசாயன உரமேற்றத்தினாலும், மாற்றுப்பயிர், பணப்பயிர் என்ற சில ஊடுபயிர்களினாலும் இன்று நமது “மண்” தன்னை இழந்து மலடானது.இந்த மண் மலடானது போல் நம் கண்களால் காணயியலாத, இன்றைய ஆரிய அடையாளத்துடன் நாம்நமக்கு வழங்கிக்கொண்டுள்ள ‘யாதவர்’ என்ற புதுப்பெயர், நம்மை, தமிழ் இன அடையாளத்தை விட்டே வேரறுத்து, மலடாக்க முற்பட்டுள்ளது. “மதுரையில் கோவிலை சுற்றி நாயக்கர்களும், மார்வாடியர்களும்,செளராஷ்டியர்களும், யாதவர்களும் என்று வடக்கிருந்து வந்த மக்கள்தான் மதுரையை ஆக்கிரமித்துள்ளனர்” என்ற இரு முகம்தெரியாத நபர்களின் உரையாடலைக் கேட்டேன்.என் மனதில் பெரும் எரிமலையே வெடித்தது..!வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் யாரோ ஒரு சில அதிகார குழுக்கள் முடிவு செய்த “யாதவர் என்ற வடஇந்திய ஒற்றுமைத்திணிப்பினால்” தமிழைத் தாய்மொழியாக கொண்ட இந்த இடைச்சிமக்கள் தமிழகத்திலோ அல்லது இந்த இந்தியப்பெரும் தேசத்திலோ அடைந்த பயன்கள்தான் என்னென்ன..? 1931-லிருந்து இன்று 2014 வரை இத்தனை ஆண்டுகள், தாய்தமிழினத்தின் தொண்மையினமான முல்லைநிலத்து இடைமக்களின் மீது திணிக்கப்பட்ட இந்த வடஇந்திய ஒற்றுமை(யாதவர்) என்ற “சமூக அநீதியின்” இத்தனை ஆண்டுகால கோரமுகம்தான், எமது வரலாறு தெரியாத பிறசமூக மக்களின் அரத்தமற்ற பேச்சு. அவர்களை மடக்கிபேசி எமது வரலாற்றை புரியச்செய்வதைக் காட்டிலும் மிகமுக்கியமான பணி, இந்த அநீதியை பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருக்கும் எம்மக்களின் அறியாமை அகற்றப்பட வேண்டும், குறிப்பாக எமது சமுக இளைஞர்கள் “யாதவர்” என்று தங்களை அழைத்துக்கொள்வது ஏதோ கடவுள் கொடுத்த வரம் என்பதைப்போல் மனநிலையில் உள்ளனர். அவர்களின் சிந்தனையை திசைமாற்றி, இடையர் வரலாற்றை பற்றிய உண்மைகளை, மழுங்கடிக்கச்செய்யும் எத்தனையோ நிகழ்வுகள் தமிழகத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.ஊருக்கு ஒரு சங்கம் என்ற நிலை மாறி, ஆளுகொரு சங்கம் என்ற எண்ணிக்கையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள எமது முல்லை நிலத்து சொந்தங்களை கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், ஒற்றுமை என்ற ஆசைவார்த்தைகளில் குறிப்பாக நமது தமிழக இளைஞர்களை ஒருங்கிணைத்து பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் தமிழகத்தில் அங்காங்கே உள்ளன.. அவர்களின் நல்ல சில காரியங்களுக்காக வாழ்த்தலாம்.ஆனால், தமிழகத்தில், தமிழர்களின் ஒரு இனமான முல்லை நிலத்து மக்களுக்காக “யாதவர்” என்ற பெயரில் நடத்திவரும் தொண்டுநிறுவன நிகழ்ச்சிகளுக்கு வட இந்திய “யாதவ்” என்ற தலைவர்களை அழைத்துவரக் காரணம் என்னவோ..?தமிழ் பேசும் முல்லை நில மக்களின் ஒரே நலனுக்காகவா இவர்கள் வட இந்திய ஆநிரை மேய்க்கும் அதிகார பலமிக்க “யாதவ்” என்ற மனிதர்களை அடிக்கடி சந்திக்கிறார்கள்.?இவர்கள் என்ன காரணத்திற்காக கேரளா கர்நாடக, மராட்டியத்தை தாண்டி வடஇந்திய மக்களோடு மட்டும் உறவாடி, சிறப்பு விருந்தினர்களை அழைக்க வேண்டும்.கர்நாடகத்தில் ஆநிரை மேய்க்கும் தாழ்த்தபட்ட இனமான, கன்னட குறும்பர்களில் எவராவது ஒரு சிறந்த மனிதரை தங்களின் நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டியதுதானே..? ஏன் அவர்கள் அங்கே தாழ்ந்த இனம் என்ற ஐயமோ..!!சரி, இந்த வட இந்திய யாதவா தலைவர்களின் தமிழக நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழாக்கள் அரங்கேற்றத்திற்கு பின் நமது இடைச்சி மக்களுக்கு கிடைத்ததுதான் என்ன..?இத்தகைய நிகழ்வுகளின் யதார்த்த காரண காரியங்களை நம் சமூக இளைஞர்கள் தங்களின் அறிவார்ந்த கேள்விகளினால் ஆராய வேண்டாமா..?இத்துனை வேகமான அறிவியல் மாற்றத்திலும் கூட, உலகமே இமை குப்பி பிரமித்துப்பார்க்கும் தமிழரின் வீரத்தை, சல்லிக்கட்டு முலம் எடுத்துறைக்கும் இந்த முல்லை நிலத்து மாந்தர்களையும், இவர்களின்”வரலாற்று வித்துக்களையும்” மழுங்கடிக்கச் செய்யும் செயல்தான் இந்த ஆரிய அடையாளம். தன்னுடைய பாட்டன் முப்பாட்டனின் சரித்திறங்களையும், சாதனைகளையும் புறட்டிப்பார்க்க விருப்பம் இல்லாமல், யாரோ ஒரு வேற்றுமொழிக்காரர்களின் அரசியல் மற்றும் சமுக வளர்ச்சியை தங்களது வளர்ச்சி என்று எப்படி ஒட்டிக்கொண்டு வாழமுடியும்.ஓ..ஒரு வேலை அவனும் ஆநிரை மேய்ச்சல் தொழில் செய்கிறான், அதனால் தான் என்றால்..இந்த உலகெங்கும் எங்காவது ஒரு கூட்டம் ஆநிரை மேய்த்துக்கொண்டுதானுள்ளது, அதனால் அவனையும் அவனது சமுகத்தின் அதிகாரத்தையும் நாம் பயன்படுத்த முடியுமா..? ஏன், இங்கிருந்து 38 மைல்கள் தொலைவில் உள்ள சிங்கள இனத்திலும் ஒரு சிறுக்கூட்டமாவது ஆநிரை மேய்ப்பவர் இருக்கக்கூடும், அவர்களையும் சேர்த்து நமது இயர்பெயர் கோனார் என்பதை மாற்றி ஒரு சிங்களப்பெயர் நமக்கு வைத்துக்கொள்வோமா..?? இல்லை. உண்மை என்னவென்றால் நமது சிந்தனை இந்திய தேசத்தோடு நின்றுவிட்டது.மகாகவி பாரதி தன் பாடல்கள் மூலம் பாரதம் நமது தேசம் என்ற தேசபற்றை நம்மிடையே வளர்த்தார்.. அதற்க்கு முன் நாம் பாரத தேசத்தை ஒரு வடதேசமாகவும், குப்த மற்றும் முகலாய பேரரசாகவும் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம். இன்று பாரதம், இந்தியா என்று பல மொழி, இனம், சமயம் கொண்ட மக்கள் ஒன்றுபட்டு “சுதந்திரமாக” வாழும் நாடு என்பதிலும், நாம் அனைவரும் இந்தியர் என்பதிலும் வேரொரு கருத்தில்லை.. ஆனால் அதற்காக அடுத்த மொழியரின் இனத்தை தன் அடையாளமாக காட்ட நமக்கு தாழ்வாக அறியவில்லையா..??நல்லவேலை இந்தியதேசத்தின் எல்லை ஆப்தானிய தேசம் வரை நீண்டுவிடவில்லை, இல்லையென்றால் தாலிபான் வரை நமது உறவு விரிந்து மேலும் சிக்களாகியிருக்கும். வேறெந்த சமுகத்திலும் இல்லாத ஒரு “வரலாற்றுப் பிழை” நமக்கு நேர்ந்துள்ளது இதை யாரவது நம்மில் உணர்ந்துள்ளொமா..?உதாரணம்,இங்குள்ள வட்டித்தொழில் (பாரம்பரியம்) நடத்தும் செட்டியார் சமூகத்தினர், இராஜஸ்தான் மார்வாடிகளுடன் உறவாடி தன்னை மார்வாடியர் என்று மாற்றியுள்ளார்களா..??இல்லை. தங்களது தொழில் சார்ந்த மக்களையும் அவரது சமுதாய தலைவர்களையும் சந்தர்ப்ப சூழ்நிலையில் சந்திக்க நேரும் தருணம் அவர்களை மரியாதை கலந்த நட்புடன் வரவேற்று இனிய வார்த்தைகளுடன் மட்டுமே நின்றுவருகிறது. நமது நட்பும் அத்துடன் நில்லாமல் அதற்க்கு மேல் நாம் நமது ஈராயிரம் ஆண்டு வரலாற்றை துக்கியெறிந்து நம்மை வடநாட்டு வந்தேறிகளாக, அதுவும் “யாதவர்” என்று சொல் அது “இங்கிலிஸ்காரன்” என்பதைப்போல் அர்த்தமே இல்லாத தமிழில் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.நமது கோன், கோனார், இடையர், ஆயர் என்று நமது தமிழ்ப்பெயர்களில் இல்லை இலுக்கு, நமது எண்ணத்தை தான் மாற்ற வேண்டும்.. உதாரணத்திற்கு இன்றுரஜினிகாந்த் போன்ற ஒருவர் தன்னை ரஜினிகாந்த்க்கோனார் என்று மாற்றிக்கொண்டாலோ அல்லது நமது சமூக ஐ.பி.எஸ் அதிகாரிகள் அனைவரும் தம்பெயரின் பின்னால் கோனார் என்று மாற்றிக்கொண்டாலோ நாம் அனைவரும் நம்மை கோனார் என்றே அறிமுகப்படுத்திக்கொள்வோம் பெருமையுடன்.நமது மற்றொரு உறுத்தல், கோனார் என்று கூறிக்கொண்டால், யாதவரான கிருஷ்ணர் என்ற பரம்பொருள் நம்மை விட்டு விலகி விடுவாரோ என்று.. !! உலகின் எந்த இனம் ஆநிரை மேய்க்கும் தொழில்புறிந்தாலும் அவர்களால் போற்றுதலுக்கும்,வணக்கத்திற்முரிய கடவுளே கிருஷ்ணா பரமாத்மா… ஆனால் தமிழைத் தாய்மொழியாக கொண்ட “இடைச்சி மக்கள் தங்களை “யாதவர்” என்று கூறிக்கொண்டு தமிழகத்தில் பிழைப்புத்தேடி வந்த வந்தேறிகளாக தங்களை அடையாளப்படுத்துவது இந்த இடையர்வரலாற்றுக்கே மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கே இலுக்கு..!இங்கு கடவுளுக்கே தமிழ்ப்பெயர் தாங்கி, தமிழ்ப்பாடலுக்காக தலை சாய்த்தாக வரலாறு உள்ளது.. நம்முடைய வைணவ ஆழ்வார்கள் அனைவரும் தமிழிலேயே தான் அந்த யாதவன் என்ற மாயக் கண்ணனை போற்றி வணங்கியுள்ளனர், அத்தகு சிறப்புற்ற நம்தமிழினத்தை, தமிழ் பெயர்களை என்ன காரணத்திற்காக நாம் விட்டு விலகவேண்டும்..? நாம் நம்மை இடையர், கோன், கோனார், ஆயர் என்று தமிழினப்பெயர் கொண்டு அடையாளப்படுத்தி நம் வரலாற்றோடு இயைந்து வாழ்ந்தால் அந்த கடவுளே மிக்க மகிழ்ச்சிக்கொள்வார்.. இல்லை, இல்லை, நீங்கள் “யாதவர்”என்று கூறிக்கொண்டால் தான் நான் ஆசி வழங்குவேன் என்று எந்த கடவுளும் சொல்லவே இல்லை, அதுவும் கிருஷ்ண பரமாத்மா சொல்லவே இல்லை.தமிழ் கடவுளாகிய முருக பெருமான், பழமுதிர்சோலையில் ஆடு மேய்க்கும்இடையராக அவதரித்து அவ்வையரிடம் திருவிளையாடல் புரிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.. ஏன் இத்தனை ஆண்டுகாலம் இடையறாக அவதரித்த முருக கடவுள் நம்மிடையே விழாக்களிலும் கொண்டாட்டங்களிலும் இல்லை..? சரி, புராணங்களின் நம்பிக்கையை அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிடுவோம்.. ஆனால் நம்மை சுற்றியுள்ள நமது வரலாற்றுக் கதைகளை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.நமக்குத் தெரிந்த வரலாறு பேசுவோம்.. தமிழகத்தில் நம்மை விட பின்தங்கிய ஒரு “தமிழ்ச்சமூகம்” இந்த 50 ஆண்டுகளில் அசுரவளர்ச்சி அடைந்துள்ளது, இது அந்த சமுதாய மக்களின் தனிப்பட்ட உழைப்பு மட்டுமே காரணம், எந்த ஒரு அரசுதவியும் இன்றி, சுயதொழில் ஒன்றையே ஆதாரமாய், தன் குடும்ப நபர்களின் உழைப்பை மட்டுமே மூலதனம், என்ற அவர்களின் நம்பிக்கை.. இன்று அவர்கள் இல்லாத தொழிலே இல்லை தமிழ்நாட்டில் எனலாம்.வணிகம்- இது என்ன புது தொழில்நுட்பமா நமக்கு.. எங்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை கடும் வேயிலிலும், சூரைமழையிலும் மேய்த்து(வளர்த்தல் மற்றும் காத்தல்) அதிலிருந்து பால் மோர் தயிர் என்று ஊர் மக்களிடம் வணிகம் செய்து, தன் குடும்பத்தையும், தன் உயிரினும் மேலான கால்நடைகளையும் பேணி பாதுகாத்து வாழும் இடைச்சி மக்களுக்கு புதிதல்ல வணிகம், அது நம் குருதியின் குணம்.நாம் முதலில் நமது சிந்தனையையும் வரலாற்றையும் மீட்டு தமிழராக தமிழ்ப்பெயருடனே இடையர், கோனார், ஆயர் என்றே நம்மை அடையாளப்படுத்த வேண்டும்..தொழில்முறை இன அங்கீகாரம் – இதுதான் இன்றைய அரசு, சாதி அல்லது சமூக குழுக்களுக்கு வழங்கிவரும் “மண்ணின் மைந்தர்கள் அல்லது பூர்வகுடிமக்கள்” என்ற அரசியல்(அரசு முறை) அங்கீகாரம். இந்த பார்பன மேதாவிதனத்தை இன்றைய அரசு அனுமதிப்பதா..? என்பது மற்றொரு தனி விவாதம்..!உண்மையில் இந்துமதத்தின் ஆணிவேர், பிரம்ம ரகசியம் அறிந்தவர்க்கம் என்று தன்னை தானே பெருமை பேசித்திறியும் எந்த ஒரு ஆரியன் தன்னை ஒரு “ஒருங்கிணைத்த தேசிய சாதியாக” கூறிகொண்டதில்லை.. இன்றுவரை தன்னை வாட்டர மொழிபேசும் பிரமணன் காட்டிகொள்கிறான்… அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் அவர்களின் தாய்மொழி என்ன என்பதெல்லாம்.. வேறுஒரு தொடர்கதை..சரி நாம் நம் விசயத்திற்கு வருவோம்..தமிழத்தின் பூர்வகுடி மக்களான முல்லை நிலத்தின் இடையர்களை.. ஒருங்கிணைந்த வடஇந்திய புதுபெயரில் “யாதவர்” என்று கூறிகொண்டதினால்.. யாரோ ஒரு ஆநிரை மேய்க்கும், தமிழ் தாய்மொழி அல்லாத வேறு சில சமூக மக்கள் இந்த மண்ணின் பூர்வகுடி மக்களாக முயன்றுவருகின்றனர்.சமீபத்திய நமது சமூக மாத இதழில் இடையரின் பல்வேறு உட்பிரிவுகள் என்று ரெட்டியார், நாயுடு, நாயக்கர், கொல்லா குருபா(கன்னடம்) பதிவுசெய்துள்ளனர். இந்த அபலத்தை என்னவென்று சொல்வது, அறிவார்ந்தவர்களே கவனம், யாரோ சில தலைவர்கள் அறிந்தோ அறியாமலோ செய்த மற்றும் செய்துகொண்டுருக்கிற தவறுகளை உங்கள் அறிவார்ந்த கேள்விகளால் நமக்கு நேர்ந்த இந்த வரலாற்றுப்பிழையை திருத்திக்கொள்ள முற்படுங்கள்.. இன்றே சிந்தி, செயல்படு, இல்லை என்றால் நம் அடுத்த தலைமுறை தாய்த்தமிழ் நாட்டில் தன் உரிமை இழந்து அகதியாக நிற்கக்கூடும்.சரி என்னால் என்ன செய்யமுடியும் என்ற கேள்வி கேட்கும், உங்கள் ஒவ்வொருவரின் கேள்விகள்தான் நமக்கு நேர்ந்துள்ள இந்த சமூக அநீதியை துடைத்தெறிய முனையும் துவக்கத்திற்கான மையப்புள்ளி.உங்கள் பணியை… மன்னிக்கவும், உங்களின் கடமையை இவ்வாறு துவக்குங்கள்.உங்கள் வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதைக்காட்டிலும் மிக முக்கியமானதும் இதுவே..! உங்கள் வீட்டு குழந்தைகளின் சாதிச்சான்றிதழ்களை தமிழினத்தின் தொண்மையினமான ஆயர் அல்லது இடையர் என்றே பதியவும். தற்சமயம் இத்தகைய பதிவுகள் தமிழகத்தில் மறுக்கப்பட்டே வருகிறது. ஆதலால் இதற்கான கோரிக்கை மனுவை அவரவர் தங்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சமர்பிக்கவும். இதை தவிர்த்து வேறெந்த புதுப்பெயரிலும் நம் குழந்தைகளுக்கு சாதிச்சான்று வேண்டாம் என்றே மனுவில் பதியவும். இந்த கோரிக்கை மனுக்கள் திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் நமது அடுத்தகட்ட நடவடிக்கைப் பற்றி பேசலாம்.குறிப்பு: உங்களின் கோரிக்கை மனுவுடன் தங்கள் குடும்ப ஆவணங்களில் ஏதேனும் ஒன்றில் நமது பூட்டன், பாட்டன் அவர்களின் சாதிப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆவண நகல்களை சேர்த்து சமர்ப்பிக்கவும்.- #இடையர் _விழுதுகள் #கோனார் _கொற்றம்