Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

நடுகல் வழிபாடு

வெட்சியும்_கரந்தையும். முன்னோர்களின் நினைவாக நடப்பட்ட நடுகற்கள் சாலையின் ஓரத்தில் இருப்பதைப் பார்த்தபடி, எத்தனையோ முறை கடந்து போயிருப்போம். நின்று பார்க்கவோ அல்லது அதன் கதையைப் பொருட்படுத்திக் கேட்கவோ, நமக்கு நேரம் இருப்பது இல்லை. இன்னும் கொஞ்ச காலத்துக்குப் பிறகு நம்மில் யாரேனும் அதைக் கேட்க நினைத்தாலும், சொல்லும் நபர் யாரும் இருக்கப்போவது இல்லை. கடந்தகாலத்தை எல்லாம் இறந்தகாலம் என வகைப்படுத்தி, ‘இறந்ததை அழிப்பது அவசியம்தானே!’ என வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்கிறோம்.ஆனால், இவற்றுக்கு நேர்மாறாகச் சிந்தித்தவர்கள் நமது முன்னோர்கள். இறந்துபோன ஒருவன், எதிர்காலத்தில் நினைக்கப்பட வேண்டும் என்பதற்கான எண்ணற்ற முயற்சிகளைச் செய்தார்கள். அவர்களது விடாப்பிடியான முயற்சியின் அடையாளங்களே நடுகற்கள்.தமிழர்கள், போரை ஏழு வகைகளாகப் பிரித்தார்கள். ஏழு வகைப் போர்களிலும் சிறப்பான வீரத்தை வெளிப்படுத்தியவனின் நினைவாக நடுகல் அல்லது வீரக்கல்லை அமைத்தனர். ஒரு நடுகல் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறான் தொல்காப்பியன். ‘ஒரு வீரனின் புகழை என்றென்றும் சுமந்து நிற்கப்போவதால் வலிமை மிகுந்த கல்லைத்தான் நடுகல்லாக நடவேண்டும். ஊருக்குப் பக்கத்தில் கிடக்கிறது என்பதால், எந்தக் கல்லையும் தூக்கி நட்டுவிடக் கூடாது’ என்கிறான்.நெற்கதிரில் விளைந்த கதிர், விளையாத கதிர் என இருப்பதுபோல, கல்லிலும் விளைந்த கல், விளையாத கல் இருக்கின்றன. விளையாத கல்லைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது.ஆள்காட்டி விரலை மடித்து, மண்பானையைத் தட்டிப்பார்த்து வாங்கும் பாட்டியைப்போல, பாறையின் மேலே ஓடும் ரேகையைத் தட்டிப்பார்த்து, அதன் விளைச்சலையும் பக்குவத்தையும் சொல்லும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் மண்ணியலோ, அது சார்ந்த அறிவியலோ படித்தவர்கள் அல்ல; மரபு வழியான அறிவைப் பெற்றவர்கள். அந்த அறிவின் ஆதிமரபுக்குச் சொந்தக்காரனை அழைக்கிறான் தொல்காப்பியன்.அப்படிப்பட்டவனை அழைத்துப்போய், தகுதியான கல்லைக் கண்டறிந்து, பின்னர் நல்ல நேரத்தில் அந்தக் கல்லை நீராட்ட வேண்டும். அதன் பின் அந்தக் கல்லைப் பொருத்தமான இடத்தில் நிறுவவேண்டும். அதைத்தான் ‘கால்கோள்’ என்கிறான். இன்றைக்கும் மாநாடுகளுக்கும் அரசு விழாக்களுக்கும் ‘கால்கோள்’ நடும் அழைப்பிதழ்களை நாம் பார்க்கிறோம். இந்தக் கால்கோள் எனும் சொல்லை நட்டவன் தொல்காப்பியன். 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக கல் சிதைந்தாலும் சொல் சிதையாததே தமிழின் பெருமை.இந்தக் கால்கோள் நட்ட பின்னர் கொண்டாட்டங்களும் விருந்துகளும் தொடங்கும். அந்த வீரனைப் பற்றி வாழ்த்துப்பாக்கள் பாடப்படும். அவனின் கதை தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். வீரம்தான் புகழை அடையும் வழி என்பதை வழியில் நிற்கும் அந்தக் கல், வரும் சந்ததிக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். இறப்பு என்பது வாழ்வு முடியும் இடம் அல்ல என்பதன் சாட்சியாக மாறுகிறான் அந்த வீரன்.நடுகற்கள் அமைக்கும் பழக்கம் சங்க காலத்தில் மிக அதிகமாக இருந்ததை இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது. ஏழு வகையான போர்கள், அவற்றில் எண்ணற்ற வகையான மரணங்கள். எல்லா மரணங்களும் சமூகத்தால் நினைக்கப்படுவது இல்லை. அவற்றில் தனித்துவமாக வீரத்தை வெளிப்படுத்தியவனின் செயல்தான் போற்றப்படுகிறது. அந்த வீரனே கல்லிலும் கவியிலும் வாழ்பவன் ஆகிறான்.வேளாண்மை சார்ந்த அன்றைய சமூகத்தின் பெரும் செல்வமாக இருந்தது கால்நடைகளே.எனவே, இவற்றைக் கவர்ந்துசெல்வதும் மீட்பதும் மிக முக்கிய செயல்பாடுகளாக இருந்தன.

கால்நடைகளைக் கவர்ந்து வரும்போது நடக்கும் போரை ‘வெட்சி’ என்றும், மீட்கும்போது நடக்கும் போரை ‘கரந்தை’ என்றும் தமிழர்கள் பெயர் சூட்டியிருந்தார்கள். இந்த இரண்டு வகைகள் உள்ளிட்ட அனைத்து வகைப் போர்களிலும் சிறந்த வீரத்தை வெளிப்படுத்திய அனைவரும் நடுகற்களாக மாறினர்.நடுகல் அமைத்து வீரனைப் போற்றுவது அன்றைய சமூகத்தின் பெருவழக்கம். ஆனால், சங்க காலத்தில் நடப்பட்ட நடுகல் ஒன்றுகூட, இன்றைய தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. அது ஏன் என்பது புரியாத புதிராக நீடித்தது.இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறை ஆய்வாளர்களால், வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள புலிமான்கோம்பை (புள்ளிமான் கோம்பை என்பது பயன்பாட்டுப் பெயர்) கிராமத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், மண்ணுக்குள் புதையுண்டுகிடந்த ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்களில் வரலாற்றாளர்களுக்குப் பெரும் ஆச்சர்யம் ஒன்று காத்திருந்தது.பசுக்களைக் கவர்ந்து வரும்போது தாக்கப்பட்டு இறந்துபோன வீரன் ‘அந்துவன்’ நினைவாக நடப்பட்ட வீரக்கல். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தமிழ் பிராமியில் எழுதப்பட்ட இந்தக் கல் தூய தமிழ்ச் சொற்களைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் சுமார் 2,400 ஆண்டுகள் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இந்திய அளவில் இதுவரை கண்டறியப்பட்ட நடுகற்களில் மிகப் பழமையானது இது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பரந்த பாரத தேசத்தில் கல்லிலே பொறிக்கப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள முதல் பெரும் வீரனின் பெயர் அந்துவன். வரலாற்றில் நாம் இதுவரை படித்த அனைத்து வீரர்களும் அந்துவனுக்குப் பிந்தியவர்களே. #புலிமான்கோம்பைக்கு அடுத்து இருக்கும் தாதபட்டியிலும் காலத்தால் பழைமையான நடுகற்கள் கிடைத்துள்ளன. அதுவும் போர் வீரர்களின் புகழ் பேசுகிறது.இந்திய நிலப்பரப்பின் பெரும் பகுதியை ஆட்சிசெய்த பேரரசன் அசோகன், தனது அரசு ஆணைகளை கல்லிலே பொறித்து, பெரும் ஸ்தூபிகளை உருவாக்கினான். சாஞ்சி ஸ்தூபி, பிப்ரவாஸ் ஸ்தூபி, பாரூத் ஸ்தூபி, நாகார்ஜுனா ஸ்தூபி என எண்ணற்ற ஸ்தூபிகள் அசோகனின் ஆணைகளைப் பறைசாற்றின. இதில் ஒரு ஸ்தூபிக்குப் பக்கத்தில் எழுப்பப்பட்ட கல்தூணில்தான், நான்கு சிங்கங்கள் முதுகை ஒன்றோடு ஒன்று இணைத்துக்கொண்டிருக்கும் சிற்பம் இருக்கிறது. இதுவே சுதந்திரத்துக்குப் பின்னர், இந்திய அரசின் சின்னமாக ஆக்கப்பட்டது.இந்திய வரலாற்றில் தன்னிகரற்ற இடத்தைப் பெற்ற இந்த ஸ்தூபிகளை, பேரரசன் அசோகன் அமைப்பதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால், அவன் பயன்படுத்திய அதே எழுத்துமுறைகொண்டு, தூய தமிழ்ச் சொற்களை பயன்படுத்தி, வைகைக் கரையில் அமைந்துள்ள சின்னஞ்சிறு கிராமத்தில் ஒரு வீரனின் புகழை அந்தக் கிராமத்து மக்கள் எழுதியிருக்கின்றனர்.பேரரசும் பெரும் அதிகாரமும் இல்லாமல் சாமானிய மக்களால் எழுதப்படும் சரித்திரமாக இது இருக்கிறது. இந்தச் செய்தி இதுவரை எழுதப்பட்ட வரலாற்றைக் கலைத்துப்போடுகிறது. தமிழ்நாட்டின் கல்வி பற்றி, நாகரிகம் பற்றி இதுவரை சொல்லப்பட்டவை போதுமானவை அல்ல என்பதை இது உரக்கச் சொல்கிறது. சில அடி உயரம் உள்ள ஒரு கல் எழும்போது, சில நூறு வருடங்களாக இங்கு சொல்லப்பட்டுவரும் வரலாறுகள் சரியத் தொடங்குகின்றன. தோண்டி எடுக்கப்பட்ட அந்தக் கல் அந்துவனின் வீரத்தை மட்டும் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கவில்லை… தமிழின் பெருமையையும் வளமையையும் நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.காவியத்தில் அர்ஜுனனையும், வரலாற்றில் அசோகனையும் நன்கு அறிவோம். ஆனால், கால்நடைகளுக்கான ‘விராட பர்வத்து’ போரிலே இறந்ததற்காக, அசோகன் காலத்துக்கு முன்னாலே நடுகல் அமைத்துப் போற்றப்பட்ட #அந்துவனை இனிமேலேனும் அறிந்துகொள்வோம்.அன்றைய பெரும் செல்வமான பசுக்களுக்காக உயிர்விட்ட #அந்துவன், இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள பெரும் செல்வமாக மாறியிருக்கிறான். நடுகல் என்பது, வீரம், மொழி, வரலாறு, பண்பாடு எல்லாம் சம்பந்தப்பட்டது. நதியை படகால் கடந்து செல்வதைப்போல, காலத்தை, கல்லால் கடக்கும் முயற்சி.இந்தக் கல்லின் பழைமையே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்றால், இந்தக் கல்லை எங்கு தேர்வுசெய்து, எப்படி நடவேண்டும் எனத் தொழில்நுட்ப விதிகளை உருவாக்கிய ஒருவன், அதற்கும் முன்னால் போய் நிற்கிறான். காலத்தை எட்டிப்பார்க்க முயலும் நம்முடைய கற்பனைத் திறனைக் கலங்கடிக்கிறான் தொல்காப்பியன்.சிந்துவெளி நாகரிகத்தில்கூட தங்கத்தால் ஆன அணிகலன்கள்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தங்கத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் இல்லை. அது தமிழ்நாட்டில்தான் கிடைத்துள்ளது. அசோகர் காலத்துக்கு முன்பு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நடுகல், இந்தியாவில் வேறு எங்கும் இல்லை; தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. இந்த வரலாற்றுப் பெருமையைக் கையில் ஏந்தியபடி வடகரையில் கோதையும் தென்கரையில் அந்துவனும் நிற்கிறார்கள். இரண்டு கரைகளுக்கு இடையில் இருப்பது, நீரோடும் நதி அல்ல; நிலைகொண்ட நாகரிகம் என்பதை உலகுக்குச் சொல்லும் சாட்சியே இவர்கள்.நடுகற்களை உருவாக்கும் முன் மனிதன் செய்த செயல் ஒன்று இருக்கிறது. அது மனிதனால் செய்யப்பட்டதுதானா என்பதில் தொடங்கி, அதை மனிதர்கள் ஏன் செய்தார்கள் என்பது வரை, பல கேள்விகளுக்கு இன்று வரை எவராலும் பதில் கண்டறிய முடியவில்லை.பதில் கண்டறிய முடியாத கேள்விகளோடுதான் வைகையின் பயணம் தொடங்குகிறது!