Flash யாதவ் மகா சபையின் சங்கித்தனம். குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

சங்ககாலத்தில் கிருசுண செயந்தி கொண்டாடப்பட்டதா,,?

ஓணம்” = திருவோணம் என்பது விண்மீன் மண்டலம்!

பண்டைத் தமிழில், வானியல் கணிதம் ஒரு நுட்பமான அறிவியல்;
Astronomy வேறு! Astrology வேறு!
Astronomy = வானியல்! Astrology = நிமித்தகம் (சோதிடம்)!

வானியல் நிலுவைகளைக் கொண்டு, மக்களுக்கு மழைக்காலம் – பயிர் வைக்கும் காலங்களைக் கணித்துக் கூறும் கணியன்கள் உண்டு! (கணியன் பூங்குன்றனார்)

* மேழம், விடை, ஆடவை… முதலான 12 ஓரைகள் (ராசி)
* முடங்கல் (Solstice), மறைப்பு (கிரகணம்)
* நாள்மீன் = தானே ஒளி “தருபவை”; கோள்மீன் = ஒளி “பெறுபவை”
இப்படிப் பல சேதிகள் சங்கப் பாடல்களில் வரும்!

தமிழ்-வானியல் குறித்த, இராம.கி. ஐயாவின் காலங்கள் & பொங்கல் பதிவிலே காணலாம்; Dr Asko Parpola is another reference! தமிழ்த் தலைநகராம் = மதுரையில், “ஓணம்” கொண்டாடிய காட்சிகளைப் பார்க்கலாமா

பண்டை முல்லைத் தமிழர்கள்…
* மாயோன் விழாவை = “ஓணத்தில்” தான் கொண்டாடினர்!
* மலையாளத்திலும், ஓணம் தான் = Biggest Festival! Not DeepavaLi:)

(தமிழர்கள் தோன்றலான மலையாளத்தில், இன்னிக்கும், பழந்தமிழ்ச் சொற்கள் – பறைதல், ஓர்தல் -ன்னு பலவும் காணலாம்)

கேரளத்தில் வீடுகள் தோறும் சிறப்பாகக் கொண்டாடும் ஓணம், தமிழகத்தில் இன்று ஆலய அளவில் மட்டும் நின்று விட்டது!
திரு ஓணத் திருவிழவில் = பெரியாழ்வார் திருமொழி!
ஓண விழாவும் காணாதே போதியோ பூம்பாவாய் = சம்பந்தர் பதிகம்!

நாள்பட நாள்பட, சங்கத் தமிழ் விழாக்கள் எல்லாம் மறைஞ்சி போய்…
ஓணம் தமிழ்நாட்டை விட்டே போய்விட்டது போலும்!
தீபாவளி போன்ற வடநாட்டுப் பண்டிகைகள், அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன!
பொங்கல் மட்டும் இன்னும் இருக்கு! அது வரைக்கும் மகிழ்ச்சி!

ஓணத்துக்கு வழங்கும் “கதை” ஒன்று உள்ளது!

மூன்றடி மண் கேட்டு, மூவுலகங்களும் அளந்து…
மாவலியைக் கீழ் உலகங்களுக்குத் தள்ளி, அங்கே அரசனாக்கி…
அடுத்த சுழற்சியில், இந்திர பதவி குடுப்பதாக வாக்களித்து…
பெருகலாதன் (பிரகலாதன்) பேரனான மாவலி, தவறே செயினும், அவனை அழிக்காமல் “ஆட்கொண்டு”…

இன்னிக்கும்,  மாவலி…
தன் பழைய நாட்டையும் மக்களையும், பார்க்க வருவதாக “ஐதீகம்”
ஓணத்துக்கு = “வைஷ்ணவக் கதை” கட்டிப்புட்டாங்க:))

இந்தப் “புராண – புருடாணங்கள்”, தமிழ்த் தொன்மத்தை, “ஊடாடிச் சிதைச்சாப்” போல வேறெங்கும் பார்க்க முடியாது:(

வேத நெறி போலவே, சமணம் – பெளத்தம் கூட வடக்கில் இருந்து வந்தவை தாம்! ஆனா ஊடாடிச் சிதைக்கலை!
“புது நெறி” என்று புதிய அளவிலேயே வழங்கினார்கள்!
Will u ever re-assign a variable, in variable declaration itself? Not a good practice – right??

முருகன் converted to ஸ்கந்தன்; திருமால் converted to விஷ்ணு,
இயற்கை வழிபாடு converted to 12 hands, 10 heads etc etc:))
இருக்கும் தொன்மத்தின் மேலேயே “புராணத்தையும்” ஏத்திட்டா…
ஆதி எது? வந்தது எது? -ன்னே கண்டுபுடிக்க முடியாது பாருங்க:((

அப்படியான தொன்மம் = “ஓணம்”!
முல்லை நில மக்கள், மாயோனுக்கு எடுப்பித்த விழா!
பூக்கோலம், ஒளி விளக்கு, சுவை உணவு, யானைத் துள்ளல் – எல்லாம் உண்டு!  வாங்க, பாட்டுக்குப் போவோம்!

பாடல்: மதுரைக் காஞ்சி
கவிஞர்: மாங்குடி மருதனார்
திணை: பாடாண்
வரிகள்: 590-605
(தலையாலங்கானத்துச் செரு வென்ற) பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது…

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார்
மாயோன் மேய ஓண நன்னாள்

சுரும்பார் கண்ணிப் பெரும்புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலிற் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழகம் நிலம்பரல் உறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர

கணவர் உவப்பப் புதல்வர் பயந்து
பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற
திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி..


பக்தி இயக்கக் காலத்தில் தமிழ் மண்ணில் பிறந்த இரண்டு குட்டிச் சாத்தான்களில் ஒன்று சைவம் மற்றொன்று வைணவம்.

இவை இரண்டிற்கும் தகப்பன் சமணம் என்ற வடஇந்தியப் பெருஞ்சாத்தான்.சமணக் கோட்பாடுகள் தான் வேறு பெயர்களில் சைவம், வைணவம்,வள்ளளாரியம்,சாய்பாபா மதம் என்று இம்மண்ணில் புழங்கி வருகின்றன.

சென்ற நூற்றாண்டில் தமிழ் வரலாறைத் தொகுத்தவர்கள் சமணர்கள் தமிழ்நாட்டைவிட்டு விரட்டியடிக்கப் பட்டனர் என்ற மாபெரும் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டனர்.

சமணர்கள் தமிழ்மன்னுக்குள் கொண்டுவந்த வழிபாட்டு உருவமான ஐயன்(ஐயனார்/சாத்தன்/சாஸ்தா),பூரணி மற்றும் பொற்கலை ஆகியவை தான் பின்னாட்களில் அனைத்து மதங்களுக்கும் கடவுள்கள் ஆகின.

இரண்டு பொண்டாட்டி கதையை தமிழ் மண்ணுக்குள் புகுத்தி ஒழுக்கத்தைக் கெடுக்க முயற்சித்தவனே சமணன் தானோ என்ற ஐயமும் இதன் மூலம் வலுக்கிறது.

நிலவுடமைச் சமூகத்தை சிறிது சிறிதாகச் சுரண்டி இறுதியில் அவர்களை ஒன்றுமில்லா ஆண்டியாக்க, சைவ வைணவ நிறுவனங்கள் தங்களுக்குள் சண்டையிடுவது போல நடித்து ஊரையே அடித்து உலையில் போட்டன.

மதங்கள் என்பவை மக்களின் நன்மைக்கு என்றால் சைவ,வைணவக் கோவில்களுக்கு எதற்கு ஆயிரக் கணக்கான ஏக்கரில் சொத்துக்கள்??யாரிடம் இருந்து சுரண்டப்பட்ட சொத்துக்கள் இவை??

இன்று இந்தியாவில் அதிகம் சொத்துக்கள் கொண்ட “ கோவில்கள் “ திருவனத்தபுரம் பத்மனாதசாமி கோவில் மற்றும் திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆகியன.

இரண்டுமே வைணவத் தலங்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.மாலிக் கபூர் வந்து கொள்ளையடிக்கும் முன் உலகிலேயே அதிகமான சொத்துக்களைக் கொண்ட கோவில் திருவரங்கம் அரங்கநாதன் கோவில் தான்.வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான கோவிலான இதற்கு எது அத்தனை சொத்துக்கள்??

சைன – வைணவ ஒற்றுமைகள்:

1.இன்று வடஇந்தியாவில் இருக்கும் சைனர்கள் ( அருகர்கள் ) வெங்காயம் மற்றும் பூண்டை உண்ணமாட்டார்கள். இன்று தமிழ் நாட்டில் இருக்கும் வைணவ ஐயங்கார்களும் இந்த இரண்டையும் உண்ணமாட்டர்கள்.

2.சைனர்கள் (அருகர்கள் ) வணங்கிய மிக முக்கியமான உருவம் சங்கும் சக்கரமும் கொண்ட பார்சுவநாதன். ஐயங்கார்கள் வணங்கும் உருவமும் அதே சங்கும் சக்கரமும் கொண்ட பெருமாள்!!

3.அருகர்களின் கடவுளுக்கு பூரணி,பொற்கலை என இரு மனைவிகள்;பெருமாளுக்கும் சிறிதேவி,பூதேவி என இரு மனைவிகள்!!

4.சைனர்கள் தமிழ் நாட்டில் வணிகத்தைக் கட்டியாள்கிறார்கள்.இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெருமுதலாளிகளின் நிறுவனக்களுக்கு முதன்மைச் செயல் அதிகாரிகளாக இருப்பதே பெரும்பாலும் வைணவ ஐயங்கார்கள் தான்.

5.சமணத் தீர்த்தங்கரர்கள் அமர்ந்திருக்கும் விதமும் இராமானுசன் அமர்ந்திருக்கும் விதமும் அச்சுப் பிசகாமல் ஒரே மாதிரியிருக்கும்.

6.சமணர்களின் சிலைகளைக் கண்டால் அதில் அவர்களின் தலைக்கு மேல் ஒரு குடை இருக்கும்.இதுவே வைணவத்தில் தலை மேல் வைக்கும் சடாரியாக மாறிப்போனது.

7.சமணக் கோட்பாடுகள் கற்பிக்கப்பட்ட ஆசீவகப் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்பட்ட வண்ணக் கோட்பாடு, வைணவ இராமானுசன் கழுத்தில் இருக்கும் ஆறு வண்ண மாலையிலும் பிரதிபலிக்கின்றது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது சமணர்கள் தான் அப்படியே மாறுவேடம் பூண்டு வைணவ ஐயங்கார்கள் ஆனார்கள் என்பதும், வைணவம் என்பது உலக மகா சுரண்டல் நிறுவனம் என்பதும் உறுதியாகின்றது.

பக்தி இயக்க காலத்தில் தோன்றிய வைணவத்தை, சங்க காலம் முதலே இருக்கும் ஒரு சமயமாக நிரூபிக்க முயன்றனர் கடந்த காலத் தமிழ் உரையாசிரியர்கள்.

நாயக்கர் காலத்தில் வைணவர்களாக மாற்றப்பட்ட தமிழ் இடையர்களை வைத்து சங்க காலம் தொட்டே வைணவம் இருப்பதாச் சொல்கிறார்கள்.

அப்படிச் சொல்பவர்களுக்கு எனது கேள்விகள்:

1.வைணவம் என்பது தமிழ் இடையர்களின் சமயமாக இருக்குமாயின் பன்னிரு ஆழ்வார்களில் ஏன் ஒருவர் கூட இடையர் இல்லை??

2.வைணவத் திருத்தலங்கள் இருக்கும் இடங்கள் அனைத்தும் வளமான நஞ்சை நிலங்களில் இருப்பது ஏன்??

3.பக்தி இயக்க காலத்தில் பாண்டிய நாட்டில் திருவோணத் திதியன்று பெருமாளுக்கு ஒரு விழா எடுக்கப்பட்டதே ஒழிய ஒரு போதும் கிருசுண செயந்தி கொண்டாடப்படவில்லை.இதனை அறிமுகப் படுத்தியதே தெலுங்கு நாயக்கர்கள் தானே?

4.முல்லைக்கலியில் வைணவத்தைப் பற்றி ஏன் எந்தக் குறிப்புகளும் இல்லை?? காளையை அடக்கிய இடையனுக்கு நாமம் போட்டவன் எவன்??

  1. வைணவம் என்பது தமிழ் இடையர்களின் சமயமாயின் வைணவக் கோவில்களின் சொத்துகளில் ஒரு பங்கை இடையரின் நலனுக்காக அவர்கள் விட்டுத் தருவார்களா??

வைணவச் சுரண்டல் நிறுவனங்களை நிர்வகித்த அனுபவக் கல்விதான் இன்று வைணவ ஐயங்கார்களை கார்ப்பரேட் நிர்வாக அதிகாரிகளாக ஆக்கியிருக்கிறது!!!

ஆனால் பொய்க் கதைகளையும் புராணங்களையும் நம்பிய சமூகம் இன்று உரிமை இழந்து தாய்மண்ணில் ஆண்டியாய்த் திரிகிறது.

இடையர் விழுதுகள்

கோனார் கொற்றம்