All posts by edayarviluthugal

யாதவ் மகா சபையின் சங்கித்தனம்.

யாதவ் மகா சபையின் சங்கித்தனம்.

வரலாற்றில் இதுவரை நடந்துள்ள எந்த நாடளுமன்றத் தேர்தலிலும் நடக்காத ஒன்றை யாரும் செய்யாத ஒன்றை நாம் தமிழர் கட்சி செய்து காட்டியுள்ளது. அதற்க்கு அக்கட்சியின் தலைமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் கோனார் கொற்றம் சார்பாக சமர்பிக்கிறோம்.

எல்லா தமிழ் இனக்குழு மக்களுக்கும் மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் சமமாக பங்கீட்டு தேர்தலில் போட்டியிட வாயப்பளித்துள்ளது.
அந்த வகையில் தமிழ்நாட்டின் பிற அரசியல் கட்சிகளோ, தேசிய கட்சிகளோ செய்யாத ஒன்றை நாம் தமிழர் கட்சி கோனார் மக்களுக்கு செய்துள்ளது.

அதுதான் இரண்டு கோனார் இன வேட்பாளர்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. உண்மையில் வரலாற்றில் இது மிக முக்கியமான நிகழ்வு

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் கோனாரான தொழில் முனைவோர் சத்யா அவர்களுக்கும், மதுரை நாடளுமன்றத் தொகுதியில் கோனாரான பேராசிரியர் சத்யா தேவி அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சமூக நீதி அடிப்படையில் கோனார் இன பெண்கள் இருவரையும் நிறுத்தியுள்ளது.

உண்மையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பிசேபி செய்யாததை நாம் தமிழர் கட்சி செய்துள்ளது. உடனே நீங்கள் கேட்கலாம் பிசேபி தேவநாதனுக்கு வழங்கியுள்ளது என்று. தேவநாதன் தமிழர் இல்லை என்பதை வெகு காலமாக வலியுறுத்துகிறோம். உத்திரபிரதேச பட்டியல் இனக் கட்ட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பிரிவு தலைவராக இருந்தவர் எப்படி தீடீர் என யாதவராகி மற்றொரு அதே உத்திரபிரதேச யாதவர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் தமிழக தலைவரானார் என்ற ஐயம் சிறுபிள்ளைக்கும் எழும். அறிவுசார்ந்த நம் கோனார் சொந்தங்களே சிந்தியுங்கள். வந்தோர் போனோர் எல்லாரும் இடையர் களை ஆள நாம் என்ன நிலமற்றவர்களா என்ன. உண்மையில் அவர் யாதவர்/கோனார் தான என்ற ஐயம் வெகுகாலமாக இங்கு நிலவுகிறது.

உண்மையில் தேவநாதன் தமிழர் என்றால் அவர் இடையரில் என்ன பிரிவைச் சார்ந்தவர் என்று பொதுவெளியில் சான்றுகளோடு வெளியிடலாம். ஆனால் அதைச் செய்யமாட்டார்கள். காரணம் பல காலமாக தெலுங்குக் குள்ள நரிகளுக்கு ஆட்டுக் தோல் போர்த்தியே பழக்கம். அப்படி திராணி இருந்தால் அவர் தூய தமிழர் என்று மெய்ப்பித்தால் கோனார் கொற்றம் ஏற்றுக்கொள்ளும்.

உண்மையில் நாம் தமிழர் கட்சியின் இந்த சமூக நீதிச் செயலுக்காகவே தமிழகமெங்கும் இருக்கும் ஒவ்வொரு இடையரும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும். அதுதான் நியாயமாக இருக்கும்.

இங்குள்ள இடையர் மக்களின் அடையாளத்தில் பல காலமாக தெலுங்கு பேசும் மக்களைத் தலைவராகத் கொண்டு செயல்படும் யாதவ் மகாசபை குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்தோடு பிசேபிக்கு ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படுகிறது என்பதுதான் உண்மை.

அப்படியான செயல்பாடுதான் அண்ணன் பொட்டல் துரையை நெல்லையில் இறக்கி அக்கா சத்யா அவர்களுக்கு விழப்போகும் ஓட்டை பிசேபிக்கு கை மாற்ற முயல்கிறது.

எங்காவது இப்படி நடப்பதுண்டா. அக்கா சத்யா பாத்தாண்டுகளுக்கு மேலாக நாம் தமிழர் கட்சியில் இருப்பதோடு நெல்லையில் நடந்த நம் சீவலபேரி பூசாரி கொலைகளுக்காக போரடியதும் சத்யா அவர்கள் தான். அந்த கொலைகளை கண்டித்து அறிக்கை வெளியிட்ட ஒரே அரசியல் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே என்பதை உணர்க. இந்த கொலை விசத்தில் தமிழ் நாடு யாதவ மகாசபையின் நிலைபாடு என்ன. இதுவரை ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்கபட்டதா. பாதிக்கபட்டவர்களுக்கு ஏதாவது நிதியிதவி செய்துள்ளாதா என்றால் ஒன்றும் இல்லை. ஆனால் சத்யா அவர்கள் கோனார் கொற்றத்தின் மூலம் அவர்களால் இயன்ற தொகையை பாதிக்க பட்டவர்களுக்கு கொடுத்துள்ளார்.

உண்மையில் பிசேபியின் அரசியல் தந்திரம் தமிழ்நாட்டில் பலிக்காது. பிசேபியின் அரசியல் ஒரு போதும் இங்குள்ள தமிழ் நிலத்துக்கும் தமிழருக்கும் உதவாது. அது தமிழர்களை மதமாய் பிரிப்பதை மட்டுமே செய்யும்.

அப்டிபடயான பிசேபி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அண்ணன் பொட்டல் துரையை பெரும் தொகை கொடுத்து களத்தில் இறக்கி விட்டுள்ளனர் பிஜேபியினர்.

உண்மையில் தமிழராகிய இடையர்களின் மேல் அக்கறை இருந்திருந்தால் பொட்டல் துரையை இராமநாதபுரத்திலோ, சிவகங்கையிலோ இறக்கியிருக்காலாமே.

இந்த இரு மாவட்டங்களில் இடையர்களின் எண்ணிக்கை நெருக்கமாக உள்ளது.

தமிழ்க் யாதவ் மகாசபை எப்போதும் தமிழர்களாகிய இடையர்களுக்கானது இல்லை என்று பல காலமாக காட்டிக்கொண்டே வருகிறது.

நெல்லை இடையர்களே சத்யா அவர்களுக்கும் மதுரை தொகுதி சத்யா தேவிக்கும் பெருவாரியான வாக்கு செலுத்தி சத்யா அவர்களின் வெற்றியைச் சாத்தியப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.


கோனார் கொற்றம்

தமிழ்குடிகள்

share

குலசாமி

குலசாமி

இரவு பத்து மணி முதல் இரண்டு மணிவரை உள்ள காலம் “ யாமம் “ என்று தூய தமிழில் அழைக்கப்படும். இதுவே பேச்சு வழக்கில் “ சாமம் “ என்று மாறியது. நடுச்சாமம் என்றால் சரியாக இரவு பனிரெண்டு மணி என்று பொருள்.

ஒரு மனிதன் இறந்தபிறகு அவனின் பூத உடல் மட்டும் தான் மண்ணோடு மண்ணாக மக்கிப்போகிறது.அவன் நினைவலைகள் இந்த உலகை விட்டு வேறு எங்கும் போகாது.அவன் வாழ்ந்த இடங்களை சுற்றி சுற்றி வரும்.இந்த நினைவலைகளை உணரும் ஆற்றல் இயற்கையாகவே காகங்களுக்கும் நாய்களுக்கும் உள்ளன.

நடுச்சாமத்தில் நமது முன்னோர்களின் நினைவலைகள் உச்சத்தில் இருக்கும். சாமத்தில் வருவது தான் “ சாமி “ . சக்திவாய்ந்த இந்த நினைவலைகள் இறந்த காலம்,நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தை நன்கு அறிந்தவையாகும். முக்காலத்தையும் அறிந்து உணர்ந்ததுதான் தான் சாமி . இந்த நினைவலைகள் ஒரு மனிதன் உறங்கும் பொழுது அவன் மூளைக்குள் இறங்கினால் அதற்குப் பெயர் “ கனவு “ .உடலுக்குள் இறங்கி குறி சொன்னால் அதற்குப் பெயர் “ சாமியாடுதல் “.

நமது முன்னோர்கள் நமக்கு என்றும் நன்மை செய்யவே நினைப்பார்கள்.அதனால் தான் அவர்களது நினைவலைகள் நம் கனவில் வந்து எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஆபத்துக்களைப் பற்றி நமக்கு எச்சரிக்கை செய்கின்றன.
கொங்கு மண்டலத்தில் வாழும் பெற்றோர்கள் இன்றும் தங்களின் குழந்தைகளை சாமி என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.அதாவது தங்கள் முன்னோர்கள் தான் தங்களுக்குக் குழந்தையாகப் பிறந்துள்ளனர் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு தான் இது. பாட்டன் –>பேரன் , பாட்டி —> , பேத்தி என 1,3,5,7 என்ற ஒற்றைப் படையில் நம் மரபுகள் கடத்தப் பட்டுக்கொண்டே இருக்கும்.

மறைநிலவு நாளன்று நம் முன்னோர்களுக்கு அவர்கள் விரும்பி உண்ட உணவுகளைச் சமைத்து நாம் படைக்கிறோம். அதிலும் குறிப்பாக ஆடி,புரட்டாசி மற்றும் தை மாத மறைநிலவு நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.பெரும்பாலும் அசைவ உணவுகளைத்தான் ஒருகாலத்தில் நம் மக்கள் படைத்தார்கள்.ஆனால் இன்று சைவ உணவுகளை மட்டும் படைக்குமாறு மாற்றப்பட்டுள்ளனர்.

நம் வீட்டில் பெரியவர்கள் இறந்து விட்டால் 1,3,5,7 என்ற ஒற்றைப் படை நாட்களில் தான் நாம் படையல் வைக்கிறோம்.

குல/காவல் தெய்வங்கள் :

நல்லெண்ணத்தோடு இறந்தவர்களின் நினைவலைகள் அதே நல்லெண்ணத்தோடு நம்மைக் காக்கும்.

போரில் இறந்த மாவீர்களின் நடுகற்கள் இருந்த இடங்கள் தான் இன்று ஊர்களின் காவல் தெய்வங்களாக வழிபடப்படுகின்றன.

இவ்விடங்களில் தவறாமல் ஒரு சூலமும் வேலும் இடம்பெறும்.சூலம் எதற்காகவென்றால் நடுகல்லிருக்கும் இடத்தில் சேவல்/கிடாய் போன்ற மிருகங்களை பலியிட வேண்டும் என்று ஆண்களுக்கு நினைவுபடுத்த வைக்கப்பட்ட சின்னமாகும். சேவலைக் குத்தி பலியிடுவதற்குத்தான் வேல்.அவ்வேலின் கூறான தலைப் பகுதியின் கீழ் ஒரு சதுர வடிவப் பட்டை இருக்கும். அதன் வேலை சேவலைக் கீழே விழாமல் தாங்கிக்கொள்வதாகும்.

இரவு பனிரெண்டு மணிக்குத்தான் காவல் தெய்வங்கள் வேட்டைகுக் கிளம்பும்.அவைகள் இரத்த உணவுகளை மட்டுமே உண்ணும் என்பதால் நம் மக்கள் பொதுவாகவே இரவு நடுச்சாமத்தில் வெளியே உலாவ மாட்டார்கள்.

சென்ற நூற்றாண்டு வரை நமது கிராமங்களில் மிகத் துல்லியமாக நமது தமிழர் சமயம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ அழிவின் விளிம்பில் இருக்கிறது.

மேற்சொன்ன வழிபாட்டு முறைகளில் பார்ப்பானுக்கு வேலையே இல்லை.அனால் இன்று ஒரு கல்லுக்கு பாலை ஊற்றி அதை வணங்கும் முட்டாள்களாக பார்ப்பனீயம் நம்மை மாற்றியுள்ளது.

என் இன மக்கள் மதவாதிகளால் துண்டாடப்பட்டு அடிமுட்டாள்களாய் மாற்றப்பட்டிருப்பதைக் கண்டு வேதனையுடன் இப்பதிவை நான் எழுதுகிறேன்.
நான் மேலே எழுதியது அனைத்தும் எனது சொந்த கிராமத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து கடந்த ஆண்டு முழுவதும் நான் சேகரித்த வழிபாட்டு முறைகளாகும்.
இவற்றுக்கெல்லாம் இலக்கியச் சான்றுகள் இல்லை அதனால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லி என்னைப் புண்படுத்தாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இலக்கிய சான்று உள்ளது. திருமுருகாற்றுபடையில் வெறியாட்டு பற்றி படித்து பாருங்கள்.

மூச்சூலம் குறித்து சிலம்பில் உள்ளது. கொற்றவையின் ஆயுதம் என்று குறிப்பிடபட்டிருக்கும்.

பி கு: ஜைனம்( அருகம் )/ சமணம் , பௌத்தம் ,சைவம்,வைணவம்,சாய்பாபா மதம் போன்ற அனைத்து தண்டக் கருமாந்திரங்களும் தமிழக கிராம மக்களின் வழிபாட்டு முறைகளை அழித்தொழிக்க வந்த வந்தேறிகள் தான்.


(Sivakumar Kone)

கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும்


கலிங்ககோனாரும்ஆயிரம்வீட்டு #இடையர்களும்

கலிங்க கோனார் யோசனையை சொல்லி முடித்துக்கொண்டு அன்று இரவு கடக்கிறது அதிகாலை விடியல் சேவல் கூவுகிறது

ஆயிர வீட்டு இடையர்களும்
மன்னர் நவாப் அரண்மனைக்கு செல்வதற்கு தயாராக இருந்தார்கள்

அரண்மனையில் சமையல்கள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது
மதியம் உச்சிவெயிலில் நேரத்தில் சமையலும் நடந்து கொண்டிருந்தது கலிங்க கோனாரும் ஆயிரம் வீட்டு இடையர்களும் அரண்மனைக்கு வந்தார்கள்

மன்னர் நாவப் ஆராயிரம் விட்டு இடையர்களுக்கு விருந்து படையலாக எருமை மாடுகளும் கறிகளும் மாட்டு கறி எல்லம் சமையல் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் ஆயிரம் வீட்டு இடையர்கலிருந்து எல்லோரும் வந்தார்கள் ஏற்பாடு செய்து வைத்த போல் ஒருவர் மட்டும் வரவில்லை எல்லோரும் அவரவர் இலையில் உட்கார்ந்தார்கள் சாப்பாடும் பரிமாற தயாராகிக் கொண்டிருந்தது சாப்பாடும் இலையில் போடப்பட்டது அந்த நேரத்தில் ஆயிரம் விட்டு இடையர் இருந்து ஒருவர் மட்டும் அழுது கொண்டு வருகிறார் அந்த நேரத்தில் கலிங்க கோனார் எந்திரித்து என்ன விவரம் கேட்கிறார் என்னப்பா அழுது கொண்டு வருகிறார் என்று அதற்கு நம்ம வீட்டில் பெரிய கிழவி அதாவது ஆச்சி இறந்துவிட்டாள் என்று சொல்கிறார் இதைக்கேட்ட கலிங்க கோனர் எல்லோரும் இலை விட்டு ஏந்திருக்கிறார்கள்

மன்னர் நவாப் செய்தியைக் கேட்டு என்னன்னு கேட்கிறார் இதற்கு கலிங்க கோனார் எங்கள் வீட்டில் பெரிய கிழவி இறந்துவிட்டார் இதன் காரணமாக அங்கு ஆயிர வீட்டு இடையர்களின் இறப்பு இருந்தாள் சாப்பிட மாட்டோம் உடல் அடக்கம் பண்ணி பிறகுதான் சாமி கும்பிட்டுவிட்டு பிறகு தான்
சாப்பிடுவோம் என்று கலிங்க கோனார் சொல்கிறார் இதைக் கேட்ட மன்னன் சரி பெரிய கிளவி அடக்கம் பண்ணிவிட்டு வாருங்கள் நாளை என்று அனுப்பி வைக்கிறார்

கலிங்க கோனார் ஆராயிரம் வீட்டு இடையர்களும் எல்லோரும் வருகிறார்கள் அவரவர் வீட்டுக்கு வந்த பிறகு கலிங்க கோனர்கசொல்கிறார் மன்னரிடம் நாம் பொய் சொல்லி இருக்கோம் அதற்காக ஒரு வைக்கோலை எடுத்து பொம்மை போல் வடிவமைத்து சேலை கட்டி பிணம் எப்படி இருக்குமோ அதுபோல் உருவத்தை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்

அழுகை சத்தம் கேட்கிறது எப்படி பிணம் இருக்கம் வீட்டில் இருக்குமோ அதுபோல் அங்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன பிறகு மாலை பொழுதில் அந்த பொம்மையை வடிவத்தில் உள்ள பெரிய கிழவியை அடக்கம் செய்துவிட்டு வருகிறார்கள் வீட்டிற்கு வந்த பிறகு கலைஞர் கோனார் தன் மக்களிடம் சொல்கிறார் இன்று இரவோடு இரவாக நமது ஊரை விட்டு கிளம்ப வேண்டும் என்று 10 மணி அளவில் எல்லோரும் ஒன்று கூடுகிறார்கள் அந்த மக்களும் கலிங்க கோனார் ஊரைவிட்டு கிளம்புவதற்கு தயாராக இருந்து கொண்டிருந்தார்கள் நடுராத்திரி 12 மணி அளவில் அவரவர் பிள்ளைகளையும் ஆடு மாடுகளையும் கூட்டிக் கொண்டு கிளம்பினார்கள் ஊரைவிட்டு ஆயிரம் வீட்டு இடையர்கள் அவரவர் வீட்டில் விளக்கை ஏற்றிவிட்டு கலிங்க கோனார் மகள் திருநமம் அழகி பக்தி கொண்டவாள் ஆயிரம் வீட்டு இடையர்கள் பதளகண்டி அம்மன் சிலை வைத்து வழிபட்டவர்கள் வந்து அம்மன் சிலையும் எடுத்துக்கொண்டு வருகிறார்கள் தென்முகமாமக

ஆயிர வீட்டு இடையர்களும் கலைஞர் கோனாரும் ஊரை விட்டு காலி செய்து புள்ள குட்டிகளையும் ஆடு மாடுகளையும் தென் முகமாக போகிறார்கள் வெள்ளி மறைகிறது விடியற்காலம் சூரியன் உதித்து விட்டது காலை ஒன்பது மணி அளவில் ஆயிரம் விட்டு இடையில் தெரு பக்கம் அதாவது துணி துவைப்பது பவர் வண்ணார் வருகிறார் வந்து பார்த்தபோது கலிங்க கோனார் தன் மக்களையும் காணவில்லை வன்னார்
மன்னருக்கு அரண்மனையில் செய்தியைச் சொல்கிறார்

வண்ணார் எப்படி சொல்லுகிறார் என்றால் ஆயிரம் இடையர்களையும் கலிங்க கோனார் தன் வீட்டில் விளக்கை ஏற்றி வைத்துவிட்டு ஊரை விட்டு கிளம்பி விட்டார்கள் என்று இதைக் கேட்ட மன்னர் தன் படைகளை விட்டு தானும் இந்த மக்களை பிடிக்க உத்தரவு விடுகிறார்

திருவெட்டுநல்லுர் ஐயனார் கோயிலும் ஆயிரம் வீட்டு இடையர்கள் தொடர்பு


ஆயிரம் வீட்டு இடையர்களும் திருவெட்டு நல்லுர் ஐயனார் கோயிலும்

ஊர் மக்களும் கலிங்க கோனாரும் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு தென்முக வருகிறார்கள் தென் முகமாக வரும்போது காவேரி ஆற்றை கடக்க வேண்டும் ஆற்றில் வெள்ளம் அடித்து ஓடிக்கொண்டிருக்கிறது கலிங்க கோனாரும் அந்த ஊர் மக்களும் இந்த ஆற்றை கடக்க வேண்டும் இரண்டு ஆற்று பக்கம் தென்னை மரங்கள் இருக்கின்றது இந்த நேரத்தில் நவாபும் அவருடைய படையும் கலிங்க கோனார் பின் தொடர்ந்து வருகிறது கலிங்க கோனார் மகள் திருநாம அழகி கடவுள் பக்தி கொண்டவர் ஆற்றைக் கடக்க வேண்டும் இரண்டு பக்கங்களும் தென்னைமரங்கள் பாதாளகண்டி அம்மன் வேண்டுகிறாள்

காவேரி ஆற்று பக்கமும் வட கடற்கரையில் இருந்த தென்னை மரங்கள் தென் பக்கம் இருந்த தென்னை மரங்களும் கீழே சாய்கிறது இது இரண்டு பக்கம் சாய்ந்த தென்னை மரங்களில் மேல் ஆயிரம் வீட்டு இடையர்களும் மக்களும் ஆற்றைக் அடைகிறார்கள் கடந்தவுடன் இரண்டு பக்கங்களும் சாய்ந்த தென்னை மரம் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று பாதாள கண்டி அம்மனை திருநாம அழகி வேண்டுகிறாள் திருநாம அழகி வேண்டுதலில் தென்னை மரங்கள் நிமிர்ந்து நின்றன பின்னாடியே வந்த நவாபும் அவருடைய படைகளும் ஆற்றை கடக்க முடியவில்லை இவர்களை விட்டு தன்னுடைய அரண்மனைக்கு செல்கிறார்

ஆற்றைக் கடந்த பிறகு கலிங்க கோனார் ஆயிர வீட்டு இடையர்களும் தென்முகமாக வருகிறார்கள்
திருப்பரங்குன்றம் வில்லிபுத்தூர் சேத்தூர் சிவகிரி புளியங்குடி
வழியாக வருகிறார்கள்
ஆடு மாடுகளையும் தன் மக்களை கூட்டிக்கொண்டு தெற்கு திசை வருகிறார் கலிங்க கோனார் வரும் வேளையில் கிழக்கு பக்கமாக அடர்ந்த காடுகளையும் கடந்து வடக்கு பக்கமாக இடைச்சி பாறை என்ற இடத்தில் தன் மக்களால் கூடாரம் போடுகிறார் தன் மக்களை இடைச்சி பாறை என்ற இடத்தில் வெகுநாட்களாக கலிங்க கோனாரும் ஆயிரம் விட்டு இடையர்களும் வாழ்ந்து வந்தனர் இந்த வேலையில் வடதிசை பக்கமாக யானைகளும் தீபங்களும் பெரும் கூட்டம் வருகிறது இதை பார்த்த கலிங்க கோனாரும் தன்னுடைய மக்களும் மன்னர் நவாப் தான் வந்துவிட்டார் என்று பயத்தில் எழுந்து நிற்கிறார்கள் பின்னர் யானைகளும் தீப்பந்தங்கள் நெருங்கி வந்த போது ஐயா
கலிங்க கோனார் ஆதியிலே நான் முருகன் ஐயா உங்களைக் காக்க வந்தன எனக்கு பொங்கல் வைத்து ஒரு கிடா பழி கொடுத்து என்னை வணங்கி வாருங்கள் நான் உங்கள் மக்களையும் வாம்சத்தையும் காவல் காத்து வருகிறேன் என்றும் சொல்கிறார் அந்த சொல்லும் வேளையில் ஐப்பசி மாதம் கடைசி வெள்ளி அந்த கடைசி வெள்ளியில் கலிங்க கோனார் பொங்கல் வைத்து கிடா வெட்டி பலிகொடுத்து ஆதி முருகனை வணங்கி வருகிறார்கள் ஆயிரம் வீட்டு இடையர்களும் கலிங்க கோனாரும்

நெடுங்காலமாக வாழ்ந்து வந்தார்கள் நேரத்தில் ஆடு மாடுகளை மேய்க்க இடம் தேடுகிறார்கள் கலிங்க கோனார் இடத்தை தேடும் வேலையில் சொக்கம்பட்டி மலையடிவாரத்தில் மேற்கு ஆடு மாடுகளை கொண்டு வந்து அந்த இடத்திலேயே ஆடு மாடுகளை மேய்ச்சல் விற்று அந்த இடத்திலேயே பாதுகாத்து வருகிறார்

தினந்தோறும் சொக்கம்பட்டி பாறையில் தன ஆடுமாடுகளை பாதுகாத்து வந்த கலிங்க கோனார் பால் கரைந்து தன்னுடைய இருக்கும் இடத்தில் கொண்டு போகிறார் தினந்தோறும் இதே வழியில் வெகுநாட்களாக நடந்துகொண்டு போகிறர்
சொக்கம்பட்டி பாறையில் அடுத்து கடந்து போகையில் நீ
வேர் காலில் தட்டுகிறது தினந்தோறும் கலிங்க கோனார் கலில் தட்டுவதை பார்த்த வீட்டில் போய் கோடழி எடுத்துக்கொண்டு வேரை வெட்டும்போது வேரிலிருந்து ரத்தம் வெளியேறுகிறது திருவெட்டு ஐயனார் கோயில் தோன்றுகிறது

முதன்முதலில் தோன்றியது கற்சிலை அய்யனார் கோவில் அதன்பிறகுதான் திருவேட்டை நல்லூர் கோவிலாக மாறியது தற்போது இருக்கும் திருநெல்வேலி பக்கத்தில் புளியங்குடி அமைந்துள்ள திருவேட்டை நல்லூர் அய்யனார் கோவில் ஆடி மாதம் நிகழ்ச்சியில் நடைபெறும்

இக்கோயிலில் திருவேட்டஅய்யனார், திருவாய் அம்மன்-திருநாமஅழகி அம்மன் சன்னதிகளும், தவசிநாதன், சித்தநாதன், பெருமாள்சாமி, வில்லிபுத்தூரார், சுத்தம் பெரியசாமி, பலவேசக்காரன் , கருப்பசாமி, நல்லதம்பிவல்லையாகாரன்,சங்கிலிபூதத்தார்

இக்கோயிலில் இரண்டு காலப் பூஜைகள் நடக்கின்றன. மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

Wikipedia

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

கோனார்_கொற்றம்

நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள்

அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு மூத்தோர் வழிபாடு, நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில் மதங்கள் தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழி ஒரு சமயச்சார்பற்ற மொழி என கால்டுவெல் எனும் மொழியியல் அறிஞர் குறிப்பிட்டு உள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அந்த வகையில், சங்க இலக்கியப் பாடல்களைப் படிக்கின்றபோது, நடுகல் வழிபாடு நம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக இருந்திருக்கின்றது எனத் தெரிய வருகின்றது. வீரர்களுக்கும், மன்னர்களுக்கும் அவர்கள் இறந்தபின் நடுகல் வைத்து வணங்கும் பழக்கம் நம்மிடையே இருந்திருக்கின்றது. மதம் என்ற நிறுவனமயம் ஆக்கப்பட்ட அமைப்பு நம்மிடையே சங்க காலத்தில் இல்லை. திணை வழிபாடு இருந்துள்ளது. இயற்கையை தமிழர்கள் வழிபட்டிருக்கின்றனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கின்றது என்றோ அது தான் இயற்கையை, மனித வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றது என்றோ, மனிதர்களை ஒரு கடவுள் தான் படைத்தார் என்ற கருத்து முதல்வாதம் எந்த மதம் சார்ந்தும் வாழாத தமிழர்களிடம் ஆதியில் இல்லை.

நடுகல் வழிபாடு எனப் பார்க்கின்ற போது சங்க இலக்கியத்தில் அதியமான், கோப்பெருஞ்சோழன், சோழன் ஆகியோர்களுக்கு நடுகல் இருந்ததாக நாம் பாடல்களின் மூலம் அறிந்து கொள்கின்றோம். அதே போல் ஆண்களுக்கு மட்டுமே நடுகல் நடப்பட்டதாக குறிப்புகள் கிடைக்கின்றது. புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியப் பாடல்களில் நடுகல் பற்றிய குறிப்புகள் உண்டு.

நடுகல் மீது மயில் இறகு கொண்டு அலங்கரித்தல், கள் ஊற்றுதல், ஆடுகளை துடி அடித்து பலி கொடுத்தல் எனும் வழக்கம் இருந்துள்ளது. இன்றும் ஈழத்தில் இறந்த மாவீரர்களுக்கு நடப்பட்ட நடுகல் வணக்கத்தை நாம் பார்க்கின்றோம்.

புறநானூற்றுப் பாடல் 335 இல் மாங்குடி கிழார் எழுதியப் பாடலின் மூலம் நடுகல் சிறப்பை அறிந்துகொள்ள முடியும்.

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே (புறநானூறு 335

ஒத்துப் போகாத பகைவர்களை (தெவ்வர் = பகைவர்) எதிர்த்து, முன் நின்று தடுத்து ஒளியுடைய, உயர்த்திய தந்தங்களையுடைய யானைகளைக் கொன்று விட்டு வீழ்ந்தவர்களுக்கு நட்டிய கல்லைத் தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத் தூவி வழிபடும் வேறு கடவுள் எதுவும் எங்களுக்குக் கிடையாது என நடுகல் வழிபாட்டின் சிறப்பினைக் கூறுகின்றது.

அதே போன்று கோப்பெருஞ்சோழன் இறந்தபின் அவனுடைய நண்பரான பொத்தியார் அவனை நினைத்து வருந்திப்பாடுவதாக புறநானூற்றுப் பாடல் 221 இன் மூலம் அறிந்து கொள்கின்றோம்.
நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே (புறநானூறு 221)
நம்முடைய புரவலன் இறந்ததால் இந்த பெரிய உலகம் வருந்துகின்றது. குறையில்லா நல்ல புகழையுடையவன் நடுகல்லாகி விட்டானே என வருந்துகின்றார்.

மலைபடுகடாம் எனும் ஆற்றுப்படை நூலில் ஒரு பாணர் மற்றொரு பாணரை அரசனை கண்டு பரிசில் பெற ஆற்றுப்படுத்துவார், அதில் வழி நெடுக நடுகல் இருக்கும் எனும் அடையாளத்தைக் கூறி வழி கூறுவார்.

ஒன்னார்த் தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்தென
நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர்
செல்லா இல்இசைப் பெயரொடு நட்ட
கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக … 390

புகழுடைய பெயர்களோடு நடுகற்கள் பல உண்டு வளைந்த பாதையில். உங்களுடைய பாட்டு இன்பத்தைத் தரும் வகையில் தாளத்தோடு பாடுங்கள். தொன்றுதொட்டு வழங்கும் மரபு முறைப்படி உங்கள் யாழை இயக்கி, நடுகற்களை வணங்கி விட்டு நீங்கள் செல்லுங்கள் என ஆற்றுப்படுத்துவதாக அந்தப் பாடலில் குறிப்புகள் காணப்பெறுகின்றது.

அதே போன்று ஐங்குறுநூற்றில், ஓதலாந்தையார் எனும் புலவர் யானையின் தும்பிக்கையின் சொர சொரப்பை எழுத்துகள் பொறித்த நடுகல்லோடு ஒப்பிடுகின்றார்.
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங்கை யானை (ஐங்குறுநூறு 352)
அகநானூற்றுப் பாடல் 343 இல் மதுரை மருதன் இளநாகனார் பாலை நிலத்தில் இருக்கும் உடைந்த நடுகல் ஒன்றைப் பற்றி குறிப்பிடுகின்றார்.
மரம் கோள் உமண்மகன் பெயரும் பருதிப், புன்தலை சிதைத்த வன்தலை நடுகல்(அகநானூறு 343)

வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம்

அழிவை நோக்கியுள்ள புகளூர் கல்வெட்டுகள் சங்காலம் கோனார் கல்வெட்டு ஆதரம் கல்வெட்டுகள் பழங்கால வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக உள்ளன. இதற்குக் காரணம் கல்வெட்டுகளில் இடைச்செருகல்கள் இருக்க இயலாது என்பதே. சங்க இலக்கியங்களை ஓலைச்சுவடிகளில் இருந்து படியெடுக்கையில் உள்ளது உள்ளபடி எனும் அளவிற்கு முழுமையான தகவல்கள் கிடைத்திருக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால், கல்வெட்டுகளோ காலங்காலமாக தன் மீது செதுக்கப்பட்ட செய்திகளைச் செவ்வெனே தாங்கி நிற்கிறது. சில சமயங்களில் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை மெய்ப்பிக்கவும், பழங்கால எழுத்து வடிவங்களை அறியவும் கல்வெட்டுகள் துணை நிற்கின்றன.கரூர் மாவட்டம் புகளூரில் உள்ளது புகழி மலை. ஆறுநாட்டார் மலை என்றும் அழைக்கப்படும் இம்மலையில் உச்சியில் தமிழ் கடவுளான குமரனுக்குக் கோவில் ஒன்று உள்ளது. கோவிலுக்கு கீழே தமிழுக்குப் புகழ் சேர்க்கும் கி.பி 1-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்னிரண்டு தமிழ் தொல் எழுத்து (பிராமி) கல்வெட்டுகள் உள்ளன. இங்கு ஒரே வம்சாவழியைச் சேர்ந்த மூன்று சேர மன்னர்களின் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகளும், பொன் மற்றும் துணி வணிகர்கள் பெயர் கொண்ட கல்வெட்டுகளும், சங்ககாலப் பெயர்களான கொற்றன், கீரன், பிட்டன், ஓரி போன்ற பெயர்கள் கொண்ட கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றுள் சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் காணப்படும் சேர மன்னர்கள் மூவரின் பெயர்கள் காணப்படுகின்ற கல்வெட்டு மிக முக்கியமான ஒன்று.கல்வெட்டுகள்: (படம்-1)மூதா அமண்ணன் யாற்றூர் செங்காயபன்கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோன் மகன் கடுங்கோன் ளங்கடுங்கோளங்கோ ஆக அறுத்த கல். இது ”ஆற்றூரைச் சேர்ந்த சமணப் பெரியவர் செங்காயபன் என்பவருக்கு சேர மன்னன் செல்லிரும்பொறையின் மகன் பெருங்கடுங்கோனின் மகன் இளங்கடுங்கோன் இளவரசாக இருந்தபோது செதுக்கப்பட்ட கல்” என்ற செய்தியைக் காட்டும் கல்வெட்டு.” நலியூர் ஆ பிடன் குறும்மகள் கீரன் கொறி செயிபித பளி”.இது ”நல்லியூர் பிட்டனின் இளைய பெண் கீரன் கொற்றி செய்வித்த பள்ளி” என்பதைத் தெரிவிக்கும் கல்வெட்டு. இவ்விதம் ஒவ்வொரு சமணப்படுகையின் பக்கவாட்டிலும், அதனை வழங்கியவரின் பெயர் செதுக்கப்பட்டுள்ளது.சமணப்படுகைகள் மழைச்சாரலில் நனையாமல் இருக்க படுகை அமைக்கப்பட்டுள்ள குகைகளின் விளிம்பில் முற்றமும் (படம்-2) மலையின் பின்பக்கமுள்ள சமணப்படுகைகளை அடைய சிறு நடைப்பாதையும்(படம்-6) செதுக்கப்பட்டிருக்கிறது. இவ்விதம் முக்கியத்துவம் வாய்ந்த, சமணர்களின் பாதுகாப்பிற்காக செதுக்கப்பட்ட படுகைகள்(படம்-5) இன்று பாதுகாப்பின்றி அழிவை நோக்கியுள்ளன. காலத்தால் அழியாத கல்வெட்டுகளையும், வரலாற்றுச் சின்னங்களையும் அழிக்கும் சக்தி ஒன்று உள்ளது. அதுவே மக்களின் விழிப்புணர்வின்மை. இந்த சக்தியின் தாக்கத்திற்கு புகழி மலையும் உள்ளாகி வருகிறது. மலையின் பக்கவாட்டிலும், பின்புறத்திலும் உள்ள சமணப்படுகைகளுக்கு இட்டுச்செல்லும் வழி நெடுக இரும்பு வேலி போடப்பட்டுள்ளது, இந்த பாதுகாப்பு மட்டும் போதாது என்று நினைத்த மக்கள், சமீபத்தில் நடந்து முடிந்த கோவில் விழாவின்போது பிரசாதம் வழங்கப் பயன்படுத்தப்பட்ட தட்டுகளைக் குப்பையாய் குவித்துள்ளனர்.

கல்வெட்டுகளிலுள்ள சமணத்துறவிகளின் பெயர்களோடு, மக்கள் தங்கள் வருகையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தங்களது பெயர்களையும் செதுக்கியுள்ளனர் (படம்-3,4). இதனால் எதிர்காலத்தில் கல்வெட்டுகள் முற்றிலுமாக படிக்க இயலாத நிலையை அடைந்துவிடும். இதனால் அக்கல்வெட்டுகளில் உள்ள வரலாற்றுச் செய்திகள் நமக்கு கிடைக்காமலே போய்விடும். இச்சமணப்படுகைக் கல்வெட்டுகளைப் பாதுகாப்பதன் வாயிலாக தங்கள் ஊர் சிறப்படையும் என்ற எண்ணம் மக்களிடம் வளர்ந்தால் மட்டுமே அழிவுகளில் இருந்து கல்வெட்டுகளையும், அது வெளிப்படுத்தும் சிறப்புகளையும் காக்க இயலும். புதைந்திருக்கும் புராதானச் சின்னங்களை வெளிப்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதும் அவசியம் என்பதை யாவரும் உணரவேண்டும். இல்லையென்றால் நம் முன்னோரினை, அவர்களது சிறப்பினை அறிய நமக்கு கிடைத்த அரிய சான்றுகள் நம் எதிர்காலச் சந்ததியினருக்குக் கிட்டாமலே போய்விடும். #இடையர்விழுதுகள்#கோனார்கொற்றம்

ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர்

பாண்டியர்கள் யார்?

பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பாண்டியர் எனப் பெயர் பெற்றனர். பாண்டியர் என்ன குலம் என்பது தெளிவாக இருக்கும் பொது அதை மறைத்து ஒவ்வொரு ஜாதியினரும் நாங்கள் தான் பாண்டிய மன்னரின் பரம்பரை என்று புத்தகங்களை எழுதி நூலகத்தை நிரப்பிவிட்டார்கள்.

முல்லை நிலத்து ஆயர் பாண்டியர்களோடு பிறந்த குடியினர் எனக் கலித்தொகைக் கூறுகின்றது.

“மலிதிரை யூர்ந்து தன் மண்கடல்  வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடிடம் படப்
புலியோடு வில் நீக்கிப்  புகழ்  பொறித்த கிளர்க்கெண்டை
வலியினான் வணங்கிய வாடா சீர்த்த தென்னவன்
தொல்லிசை தட்ட குடியொடு தோன்றிய நல்லினத்தாயார்”.

ஆதாரம்: கலித்தொகை முல்லைக்கலி

கடல்கோளினால் தன்னுடைய நிலப்பகுதி அழிவிற்கும் அஞ்சாது  தம் பகைவர்களான சோழர்களையும் சேரர்களையும் முறியடித்து தனது “மீன்” கோடியை பொறித்த புகழையும், வலிமையையும், பகைவர்களை வணங்கச் செய்தவனும் ஆகிய அழியாதப் புகழுடைய பாண்டியனின் பழமையான புகழுடைய குடியின் வழியில் தோன்றிய நல்லினது ஆயர் இந்த ஆயர்கள் சிறந்த போர் வீரர்கள், அவர்களின் குடியும் பாண்டியன் குடியும் ஒரே குடியை அல்லது பரம்பரையைச் சேர்ந்தது. இப்பாண்டிய பேரரசின் வளர்ச்சிக்கும், பெருக்கத்திற்கும் இந்த ஆயர்களின் படையே காரணமாகும். மேலும் ஒரு வரலாற்று ஆசிரியரின் கூற்றையும் கவனிக்க வேண்டும். மங்கையன் அல்லது பாண்டிய அரசனை உருவாக்கியவன் என வில்லியம் கோயிலோ என்பவர் கூறுகிறார்.

“The pandiyas built their pedigree much later,for an inscription of A.D. 1141 one of first of it’s kind-traces their origin to mangayan or adiyadudevan of the from whom sprang pandiyas”.

                                                                                        -Prof William Coehlo

மற்றோர் இலக்கியச் சான்று

ஒரு தமிழ் புலவர் கீழ்கண்ட சிலேடைப் பாட்டால் பாண்டியர்கள் ஆயர் என்பதனை விளக்குகிறார்.

“கோலெடுத்து கோத்துரத்தும் கோப்பாண்டி மன்னன்வடி
 வேலெடுத்தும் கோத்துரத்தல் விட்டிலனே சால்மடுத்த
 பூபாலனானாலும் போமோ புராதனத்திற் கோபாலனான குணம்”.

பாட்டு விளக்கம்:

பாண்டிய மன்னனே! வேலாயுதம் கொண்ட பாண்டியனே! உன் எதிரிகளைத் தாக்குவதற்காக அவர்களைத் துரத்திக்கொண்டு  வேலாயுதத்துடன் நீ பாய்ந்து செல்கிறாய். இதற்கு கரணம் உன் பரம்பரை புத்தி ஆதியிலே நீ ஆயனாக இருந்தவன். எனவே மன்னனான பிறகும் குட கோதுரத்தும் புத்தி உனக்குப் போகவில்லை.

கோ- என்றால் மன்னன், பசு என்ற இரு பொருள் உண்டு. இந்த இரண்டு பொருளிலும் இவர் பயன்படுத்துகிறார்.

மற்றோர் சரித்திர அதாரம் கூறுகின்றது

தமிழகத்தின் மீது சூறாவளி தாக்குதல்கள் நடத்தி வேங்கடம் முதல்  குமரி  வரை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்த களப்பிரர் என்பவர்களின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை கடுங்கோன் பாண்டியருக்கு உண்டு.

4-ம் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டு வரை தமிழகம் முழுவதும் தடுமாறச் செய்த இக்களப்பிரர் கன்னட நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது களப்பிரரது கொடுமைகளிலிருந்து தமிழகத்தை மீட்ட பெருமை  கடுங்கோன் பாண்டியருக்கு உரியது. அவர் 590-620ல் அரசாண்டார். அவர் காலம் பாண்டியர் புத்துயிர் பெற்றனர்.

“All historiyans are agreed on the point that roughly.between the IV and VI centuries the new race of kalabhras took hold of the south throwing all the erstwhile rulership of the region into darkness and disrepute, so that when the velkudi grant of the later day pandya refers to the defeat effected by kadun kone over this race usurpers”

                                                                                                -nilakanta sasthiri.

அனால் கோனார்கள் பாண்டிய மன்னர்களின் வழி வந்தவர்கள் என்று இதுவரையும் சொல்லி கொண்டதுமில்லை. இப்படி தற்பெருமை கொள்வது ஆயர்களின் வழக்கமில்லை இபொழுது அவர்கள் தங்கள் வரலாற்றை மறந்து கொண்டு இருப்பதால் சொல்லி தான் அக வேண்டும். பாண்டிய மன்னர்கள் ஆயர்குலத்தவர் இது தான் உண்மை வரலாறு.

நானும் பாண்டியர் வரலாறு என்று இருக்கும் அனைத்து ஆய்ஓளர்கள் எழுதிய நூலையும் படித்துவிட்டேன்.

அதில் இருக்கும் வரலாறு இல்லாத ஒன்றை புகுத்திய வரலராகவே உள்ளது .இல்லாத ஒன்றை இன்னார் சமூகம் என்று இருக்கும்.

இலக்கியத்தில் இருந்து சமூகம் சார்ந்த பல குறிப்புகள் இருக்கும் ஆனால் #ஆயர்கள் என்று வரும்போது மட்டும் அந்த பாடல் இருக்காது. 100% இப்படி தான் இருக்கு ஆய ஓளர்கள் என்று சுயசாதி பற்றோடுத்தான் எழுதுகின்றனர்.
உதாரணமாக சங்க இலக்கிய கலித்தொகை முல்லைகலியில் பாண்டியன் யார் தெளிவாக இருக்கும் இன்னும் சொல்ல போனால் கலித்தொகை 104 வரும் பாடல்..

“மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்,
மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,
புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,
வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்”

இந்த பாடல் பாண்டியர் வரலாற்று எல்லா புத்தகத்திலும் இடம் பெற்று இருக்கும். ஆனால் மீதி இருக்கும் ஒற்றை வரியை மட்டும் விட்டுவிடுவர் காரணம். இது பாண்டியர் தோற்றம் எப்போ ஆயர்,பாண்டியர் யார் என்று இருக்கும்…

இன்னும் சொல்ல போனால் முதல் மூத்த திணைகளனா குறிஞ்சி,முல்லை இருவர் மட்டுமே #பாண்டியரை உரிமை கொண்டாட உரிமை உள்ளவர்.. அந்த மீதி ஒற்றை வரி

“‘தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய
நல் இனத்து ஆயர்”‘

ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் இந்த ஒற்றை வரியை மறுத்தே பல கதைகள் அரங்கேறுகிறது.

ஆயனின் செங்கோல் சிறப்பு

மக்களை வழிநடத்தும் ஆயன் கோப்பெருஞ்சோழன்

கோப்பெருஞ்சோழன் எப்படிப்பட்டவன்?

புறநானூறு பாடல் விவரிக்கிறது 221-230 வரை

பாடுபவர்களுக்கெல்லாம் கொடுத்துக் கொடுத்துப் பெற்ற புகழ்ஆடுபவர்களுக்களெல்லாம் கொடுத்துக் கொடுத்துப் பெற்ற அன்புஅறநெறி கண்டவர் புகழ்ந்த செங்கோல்திறனாளர்களெல்லாம் தேடிவந்து காட்டும் அன்புமகளிர் போன்ற மென்மைக் குணம்மைந்தர் போன்ற உடல் வலிமைகேள்வி என்னும் வேதநெறி மாந்தராகிய உயர்ந்தவர்களின் புகலிடம்

இப்படி விளங்கியவன் கோப்பெருஞ்சோழன்.

இத்தகையவன் என்று எண்ணிப்பார்க்காமல், வாழத் தகுதி வாய்ந்த ஒருவனைக் கூற்றுவன் கொண்டுசென்றான்.

அதனால் துன்புறும் உறவினர்ளே, 

உண்மை பேசும் வாயினை உடைய புலவர்களே, 

ஒன்று திரண்டு வாருங்கள். 

எல்லாரும் சேர்ந்து அந்தக் கூற்றுவனை வைதுத் தீர்க்கலாம். 

உலகமெல்லாம் ஒப்பாரி வைத்து அழும்படி (அரந்தை தூங்க) வைதுத் தீர்க்கலாம்.

கெடுதல் இல்லாத புகழைச் சூடிக்கொண்ட புரவலன் நடுகல்லாக இன்று ஆய்விட்டானே.

பாடல் (சொற்பிரிப்புப் பதிவு)

பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே;

ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே;

அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே;

திறவோர் புகழ்ந்த திண் அன்பினனே;

மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;   5

துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;

அனையன் என்னாது, அத் தக்கோனை,

நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று;

பைதல் ஒக்கல் தழீஇ, அதனை

வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்!           10

‘நனந் தலை உலகம் அரந்தை தூங்க,

கெடு இல் நல் இசை சூடி,

நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே.

திணை பொதுவியல்; துறை கையறுநிலை.

கோப்பெருஞ்சோழன் நடுகல் கண்டு பொத்தியார் பாடியது.

காலம் : கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு

புறநானூற்றில் ஆயர்கள்

புறநானூற்றில் ஆயர்கள்

சங்க இலக்கியமான புறநாற்றில் முல்லைநில மக்கள் இடம் பெற்றுள்ள பாடல்கள்

   புறம் -05
       “எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும! 

   விளக்கும் :-  எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே!
  அதாவது கானகநாடன் என்பது முல்லைநில மக்களின் தலைவனை குறிக்கும்
காடும் காடு சார்ந்ததும் முல்லை நிலம் அகையால் கானகநாடன் என்கிற பெயரும் உண்டு
  இங்கே கானக நாடன் என்பது சேரனை குறிக்கிறது,

  சொற்பொருள்:-
         எருமை – எருமை மாடுகள், அன்ன – போல, கருங்கல் – கரிய கற்கள், இடைதோறும் – இடங்கள் எல்லாம், ஆனின் – மாடுகளைப் போல், பரக்கும் – பரவியிருக்கும், யானை – யானை, முன்பின் – வலிமையான, கானக – காடுகளை அகத்தே கொண்ட, நாடனை – நாட்டினை உடையனாய், நீயோ – நீ தான், பெரும – பெருமகனே
 புறநானூறு 5 பாடலில்  கூறுகிறது,

     புறம்-17
உடலுந ருட்க வீங்கிக் கடலென
வானீர்க் கூக்குந் தானை யானாது
கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
வரையா வீகைக் குடவர் கோவே.

  விளக்கம்:-   யானையின் மதநாற்றத்தை தேன் கொண்ட மலையெனக் கருதித் தங்கும் பெரிய பல யானைகளையும் மாறுபடும் வேந்தர் அஞ்சும்படி பெருகியதால் கடலோ எனக் கருதி மேகம் நீரை முகக்க முயற்சிக்கும் அளவு பெரும் படை மட்டுமல்லாது, நஞ்சை வைத்துள்ள பல்லினையுடைய பாம்பின் தலை நடுங்க இடியைப் போல முழங்கும் முரசினையும் எல்லோர்க்கும் எப்பொருளும் அளவில்லாது கொடுக்கும் வள்ளன்மையுடைய குடவர் வேந்தே!
உடலுநர் உட்க வீங்கி – மாறுபடும் வேந்தர் அஞ்சும்படி பெருகியதால்
கடல் என வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது – கடலோ எனக் கருதி மேகம் நீரை முகக்க முயற்சிக்கும் அளவு பெரும் படை மட்டுமல்லாது,

சொற்பொருள்:-
    கடு ஒடுங்கு எயிற்ற – நஞ்சை வைத்துள்ள பல்லினையுடைய
அரவுத் தலை பனிப்ப – பாம்பின் தலை நடுங்க
இடியென முழங்கு முரசின் – இடியைப் போல முழங்கும் முரசினையும்
வரையா ஈகை – எல்லோர்க்கும் எப்பொருளும் அளவில்லாது கொடுக்கும் வள்ளன்மையுடைய
குடவர் கோவே – குடவர் வேந்தே!
குடவர் என்றாலும் இடையரை தான் குறிக்கும்
இங்கே  குடவர் என்று சேரனை தான் கூறிகிறார்கள்
  புறநானூறு பாடல் 17

   புறம் 54

       இடையன்
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப்
புலி துஞ்சு வியன் புலத்தற்றே
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே.
           
   விளக்கம் :-  சீழ்க்கை(விசில்) அடிக்கும் வாயையும் உடைய இடையன் ஒருவன் சிறிய ஆட்டுக்குட்டிகளுடன், நெருங்க முடியாத ஒருபுலி இருக்கும் பெரிய அகன்ற இடத்துக்குள் நுழைவதைப் போன்றது.
சேரன்  எதிரியின் நாட்டுக்கள் போகும் உவமைய கூறுகிறது,
        
  சொற்பொருள்
      மடிவாய் = சீழ்க்கை ஒலி செய்வதற்கு மடக்கிய வாய்
  இடையன் – ஆயன், 
சிறுதலை ஆயம் =  சிறிய தலையுடைய ஆடுகளின் கூட்டம்,. துஞ்சுதல் = தங்குதல்.

இடையனை பற்றி புறநானூறு 54 பாடலில் உள்ளது

   புறம் 215       கவைக் கதிர் வரகின் அவைப்புறுவாக்கல்
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ
ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை

   விளக்கம்:-  பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோற்றையும்,  தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில் அரும்புகளோடு தழைத்த வேளைச்செடியின் வெண்ணிறப் பூக்களை வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு,  ஆயர்மகள்  சமைத்த அழகிய புளிக்கூழையும், அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும்,

   சொற்பொருள்:- கவைக் கதிர் வரகின் அவைப்புறு ஆக்கல் – பிளவுபட்ட கதிர்களையுடைய வரகைக் குத்திச் சமைக்கப்பட்ட சோறு,
தாதெரு மறுகின் – தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில்,
போதொடு பொதுளிய – மலர்களுடன் தழைத்த,
மொட்டுக்களுடன் தழைத்த,
 வேளை வெண் பூ – வேளையின் வெள்ளை மலர்கள்,
 வெண் தயிர் கொளீஇ – வெள்ளை நிறமுள்ள தயிரில் இட்டு,
ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை – இடைமகள் சமைத்த அழகிய புளிக்கூழ்,
 அவரைக் கொய்யுநர் ஆர மாந்தும் – அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும்,
   புறநானூறு 215 பாடலில் ஆய் மகளை பற்றிய பாடல் உள்ளது,

   புறம் – 221         பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
   அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;

விளக்கம்;- வாய்மையே பேசும் புலவர்களே! பாடி வருபவர்களுக்கு வரையாது வழங்கிப் புகழ் பல கொண்டவன்; ஆடும் விறலியர்க்கும் கூத்தர்களுக்கும் பொருள் பல அளித்த மிகுந்த அன்புடையவன்;  செங்கோல் உடைய ஆயனே!; சான்றோர் புகழ்ந்த நெருங

நட்புடையவன்;
   
    சொற்பொருள்:- ஆய்கோல் =ஆயனின் செங்கோல்.  திறவோர் = சான்றோர்

என்று புறநானூறு 221 பாடலில்  ஆயனின் செங்கோல் புகழை கூறுகிறது

 நடுகல் வழிபாடு 

      புறம் -265      ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
      போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல் ஆன் கோவலர் படலை சூட்டக்,
  கல் ஆயினையே, கடு மான் தோன்றல், 

 விளக்கம்:-  ஊரை மிகவும் கடந்த, பாறைகள் நிறைந்த பாழிடத்தில், உயர்ந்த நிலையையுடைய வேங்கை மரங்களின் ஒளியுடைய கொத்தாகிய நறுமணமான மலர்களைப் பனை ஓலையால் அலங்கரித்துத் தொடுத்து, பல பசுக்களையுடைய இடையர்கள் மாலைச் சூட்டி வழிபடும் நடுகல் ஆகிவிட்டாயே நீ, விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே,

    சொற்பொருள்:- ஊர் நனி இறந்த – ஊரை மிகவும் கடந்த, பார் முதிர் பறந்தலை – பாறைகள் நிறைந்த பாழிடம், ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ – உயர்ந்த நிலையையுடைய வேங்கை மரங்களின் ஒளியுடைய கொத்தாகிய நறுமணமான மலர்கள், போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து – பனை ஓலையால்  அலங்கரித்துத் தொடுத்து,
பல் ஆன் கோவலர் படலை சூட்ட – பல பசுக்களையுடைய இடையர்கள் மாலைச் சூட்டி வழிபடும்,
கல் ஆயினையே – நடுகல் ஆகிவிட்டாயே,
 கடு மான் தோன்றல் – விரைந்த குதிரைகளையுடைய தலைவனே,
   புறநானூறு 265 பாடலில் நடுகல் வழிபாடு பற்றிய இடையரை குறிக்கிறது

   புறம் 276          நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
     செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த,

  விளக்கம்:-  நரைத்து வெளிறிய தலை மயிரும், இரவமரத்தின் வித்தினைப் போல வற்றி உலர்ந்த கண்ணுடைய. தனங்களும் உடைய, சிறந்த பண்புடையா மூத்தகுடியில் பிறந்த முதுமை வாய்ந்த பெண்ணின் அன்பு செல்வன் எதிரியின் மிகப்பெரிய தோற்கச் செய்யும் போர்வீரனாக விளங்கினான். நிறைந்திருக்கும் பாலில் ஆய்மகள் தன் கை நகத்தால் தொட்டுத் தெரித்த மோர் உறை போர எதிரியின்

  சொற்பொருள்:-   நறுமை = நன்மை;
விரை = மணமுள்ள பொருள்;
துறந்த = நீங்கிய.
 காழ் = விதை;
 இரங்காழ் = இரவ மரத்தின் விதை;
திரங்குதல் = சுருங்குதல்;
 உலர்தல்;
வறு = வற்றிய.

மடம் = இளமை;
பால் = இயல்பு;
ஆய் = இடையர்;
வள் = வளம்;
 உகிர் = நகம்.
 உறை = பிரைமோர்
புறநானூறு 276 பாடலில் ஆயர் மகளீர் பற்றியும் பாடியுளனர்,

  புறம்-331        கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்ஏர் வாழ்க்கைச் சீறூர் மதவலி
     நனிநல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
     கல்லா  இடையன்  போலக் குறிப்பின்   

விளக்கம்:-இவன் கல்லையுடைத்துக் கட்டிய வலிய உவர்நீர் உள்ள கிணறும், வில்லால் வேட்டையாடி வாழ்க்கை நடத்தும் மக்களும் உள்ள சிற்றூருக்குத் தலைவன்; மிகுந்த வலிமையுடையவன். இவன் மிகவும் வறுமையுற்றால், குளிர் மிகுந்த, இருள் மயங்கும் மாலை நேரத்தில் சிறிய தீக்கடைக் கோலால் கடைந்து தீ உண்டாக்கும் இடையன்,

       புறநானூறு 331 பாடலில் இடையனை பற்றி உள்ளது,

     புறம் -339      வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர்
   வீததை முல்லைப் பூப்பறிக் குந்து;
குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
      நெடுநீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;

  விளக்கம் :-ஆனிரைகள் அகன்ற இடத்தில் புல்பூண்டுகளை உண்டி மரத்தடிநிழலில் அசையிட்டவாறே நின்றன. இடையர் முல்லைப் பூவை பறிக்க எறிந்த குறுங்கோலை கண்டு சிறிய முயல்கள் அஞ்சி அங்கே இருக்கும் நீர்நிலையில் வாளை மீன்களோடு துள்ளித் தாவி சென்ற
புறநானூறு 339 பாடலில் ஆயர்கள் பற்றியும்

  புறம்-388
நசைசால் தோன்றல்,
எ. ஊழி வாழி, பூழியர் பெருமகன்!
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்
செல்வக் கடுங்கோ வாழியாதன்,
  விளக்கம்:-மனைப்பணியாளரும் களப்பணியாளரும் கனவென்று மயங்குமாறு நனவில் அளித்த அன்பு நிறைந்த தலைவன்; பூழியரின் தலைவன். சொரசொரப்புடைய துதிக்கையும் கொம்புமுடைய யானைகள் செய்யும் போரில் மேம்பட்ட வலிய முயற்சியுடைய செல்வக் கடுங்கோ வாழியாதன் என்று அவன் பெயரைக்கூறிய அளவில்,
    நசைசால் = விருப்பமிக்க
  பூழியர் = இடையர்
  மருப்பு = கொம்பு.
        செரு = போர்.
பூழியர் என்று இந்த இடத்தில் பாண்டிய மன்னனை பாடியது பூழியர் என்றாலு இடையனை தான் குறிக்கும்

   சங்க இலக்கியமான புறநாற்றில் ஆயர்களும் ஆயர்கள் வாழ்ந்ததை பற்றியும் உள்ள தொகுப்பு

அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை

சங்க கால தமிழகத்தில் பல்வேறு குடியினர் பரவலாக வாழ்ந்து வந்திருந்ததை சங்கப் பாக்கள் மூலம் அறிகிறோம். இவர்களில் பஞ்வர், கவுரியர், குடவர், குட்டுவர், அதியர், உதியர், மலையர், மழவர், மறவர், இளையர், பூழியர்,  வில்லோர், கொங்கர், குறவர், பரதவர்,  கோசர், ஆவியர், ஓவியர், அருவர், அண்டர், இடையர், தொண்டர், திரையர், களவர், வடுகர், ஆரியர், மௌரியர், யவனர் முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
மேலே சுட்டப்பட்ட குடிகளில் அண்டர் குடியினர் பற்றி சங்க இலக்கியங்கள் சொற்பளவிலான குறிப்புகளையே தருகின்றன.
அண்டர்கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன் (கு.117:3-4)
அண்டர்கள் கட்டிய கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடும் எருதைப்போல தோன்றும் துறைவன்’ என்றும்
திண்தேர் நள்ளி கானத்து அண்டர்பல்ஆ பயந்த நெய்யின் (கு.210:1-2)
கண்டீர நாட்டை ஆண்ட நள்ளியினது காட்டில் வாழ்கின்ற அண்டர்களின் பல பசுக்கள் தந்த நெய்யுடன்’ என்றும்
பொருமுரண் எய்திய கழுவுள் புறம்பெற்றுநாமமன்னர் துணிய நூறிக்கால்வல் புரவி அண்டர் ஓட்டி (ப.ப.88:7-9)
காற்றினைப் போல் விரைந்து செல்லும் குதிரைப்படை கொண்ட அண்டர்களை ஓட்டி’ என்றும் அண்டர்களைப் பற்றி சங்க பாக்கள் குறிப்புதருகின்றன.
அண்டர் என்னும் சொல் பொதுவாக பகைவர் எனப் பொருள்படும் அண்டார் என்னும் சொல்லின் திரிபாக இருக்கலாம்; அண்டர்களும் பொதுவர்களும் குறும்பர் எனப்பட்டனர் என்று துரை அரங்கசாமி குறிப்பிடுகிறார்.1 இவர்கள் ஆநிரைப் பேணும் ஆயர் தொழிலைச் செய்பவர்கள். இவர்களது தலைவன் கழுவுள் என்பவனாவான். இவரனது தலைநகரம் காமூர் என்பதாகும். இந்நகரம் தமிழகத்தின் வடவெல்லைக்கு வடக்கே, வட ஆரிய அரசுகளின் தெற்கெல்லைக்குத் தெற்கேயுள்ள இடைப்பட்ட பகுதியில் உள்ளது என்று கூறப்படுகிறது.2
கழுவுள், பல குறுநில மன்னர்களைப் போரில் வென்றவனாவான். 14 வேளிர்களோடு போரிட்டான் என அகம் 135ஆம் பாடல் குறிப்பிடுகிறது. எருதுகளும் பசுக்களும் நிரம்ப உடைய கழுவுளின் வீரர்கள் புலவு நாற்றம் வீசும் தங்களுடைய வில்லைக் கொண்டு பகைப்புலத்திலிருந்து ஆநிரைகளைக் கவர்ந்து வருவார்கள் என்றும், இவனது நாட்டில் பாலும் தயிரும், ஆய மகளிர் தயிரினின்று எடுக்கும் வெண்ணெயும் நிரம்பியிருக்கும் என்றும், இவன் கடம்பர்களுடன் இணைந்து சேரமானோடு பொருதான் என்றும், போரில் சேரமான் இவனது ஆநிரைகளைக் கவர்ந்துகொண்டான் என்றும், சேரமானது வீரர்கள் இவனது நாட்டையும் தலைநகரத்தையும் பாழ்படுத்தினர் என்றும், ஆவின் பயனாகிய பாலும் தயிரும் கொண்டு செல்வச் செருக்குடன் இருந்த வாழ்ந்த மக்களையுடைய இவன், சேரமானோடு பொருதபின், எப்போதும் காலையில் கேட்கும் தயிர் கடையும் ஒலி இல்லாமல் போனதை எண்ணி எண்ணி வருந்தினான் என்றும், விருந்தினரை உபசரித்து வளமாக வாழ்ந்த இவனது நாட்டுமக்கள், தங்கள் செல்வத்தையெல்லாம் விட்டு விட்டு, பிறநாடுகளுக்குத் தப்பியோடினர் என்றும் அரிசில் கிழார் பதிற்றுப்பத்து எட்டாம்பத்தில் கூறுகிறார்.
இப்படி அண்டர்கள் குறித்துப் பயிலப்பட்டுள்ள செய்திகளின் மூலம் அண்டர்கள் கால்நடை மேய்க்கும் ஆயர் குடியினரின் ஒரு வகையினர் என்றும், அவர்கள் கழுவுள் என்பானின் கீழ் வாழ்ந்தனர் என்றும் பெறப்படுகிறது. போர் செய்யும் அளவிற்கு குதிரைப்படையைக் கொண்டிருந்த இவர்கள் யார், எப்போது இடம்பெயர்ந்தார்கள், எங்கிருந்து வந்தார்கள் என்பதான குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை. இதுநிற்க. இனி ஆபீரர்கள் குறித்து காண்போம்.
ஆபிரர்கள்
ஆபீரர்கள் என்றொரு குழுவினர் புராதண இந்தியாவில் வாழ்ந்து வந்தனர். தற்போது அஹீர்கள் என்று வழங்கப்படும் இவர்களைப் பற்றியத் தகவல்களாவன,
ஆபிரர்களின் தோற்றம்
ஆபிரர்களின் தோற்றம், பரவல் குறித்து பலரும் பலவிதக் கருத்துக்களைத் தருகிறார்கள்.
‘ஆபிரர்கள் முதலில் பஞ்சாபில் வாழ்ந்து வந்தனர். பின் ராஜபுதனத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர் என்றும் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் அவர்கள் கீழைச் சிந்து சமவெளிக்கும் பின்னர் அங்கிருந்து மேற்குத் தக்காணத்திலுள்ள சௌராஷ்டிரம், அபராந் ஆகிய பகுதிகளுக்கும் சென்றடைந்தனர்’ என்றும் தேபால மித்ரா தன்னுடைய த அபிராஸ் அண்ட் தேர் காண்ட்டிரிபியூசன் டு த இந்தியன் கல்சர் எனும் நூலில் கூறியுள்ளார். டி.சி.சர்க்கார் அவர்களை ஹரீட்டிற்கும் காண்ட ஹாருக்கும் நடுவிலுள்ள அபிரவன் என்ற நாட்டுடன் தொடர்பு படுத்திப் பேசுகிறார். மேலும் அஸர்பெய்ஜான் எனும் இடத்திற்கருகில் வாழ்ந்து வந்த அபைரை என்ற மேய்ச்சல் நில மக்களே ஆபிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அவர்கள் வெளி நாட்டிலிருந்து தோன்றியவர்கள் என்ற கொள்கையை மிராஷியும் வேறு அறிஞர்களும் மறுத்து ஆபிரர்கள் ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன் பஞ்சாபில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் என்பர்.பதஞ்சலி ஆபிரர்களை சூத்திர வருணத்தின் துணைச் சாதியர் எனக் குறிப்பிடுகின்றார்.3
புராதண இந்தியா  எனும் பழைய 56 தேசங்கள் என்ற நூலை எழுதிய பி.வி.ஜகதீச ஐயர் தரும் ஆபீரர்கள் பற்றி செய்திகளாவன,
ஆபீரதேசமானது ஸிந்து தேசத்திற்கு கிழக்கிலும் குந்தி (குந்தல) தேசங்களுக்கு நேர் மேற்கிலும் த்ரிகூட மலைக்கு வடக்கிலும் அகன்ற ஒரு பெரிய பூமியில் இருக்கிறது.
… இந்த தேசத்திற்கு மேற்கு எல்லையில் ஓடும் அந்த பெரிய ஸிந்து நதியே இதற்கு முக்கிய நதியாகும்.4
என்று கூறுகின்றார்.
மேலும் ‘புராண ஆபிரர்கள் கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் என ரெஜினால்ட் எட்வர்ட் என்தோவன் எனும் பிரிட்டிஷ் அறிஞரும் கூறுகின்றார். அபைரா எனும் பழங்குடி மக்கள் மெசபடோமியாவிலிருந்து  நதியைக் கடந்து, இந்தியாவின் உட்பகுதிக்கு வந்திருக்கலாம் என்ற ஹக் நெவில் எனும் அறிஞரும் கருதுகின்றனர்.’5
மகாபாரதத்தில் மௌசால பருவம் அவர்கள் பஞ்சநதத்திற்கு அருகில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. ‘அபீரியா என வழங்கப்பட்ட ஆபிரர் நாடு, சிந்துவெளிப் பிரதேசத்தில் அமைந்திருந்ததாக டாலமி குறிப்பிடுகிறார்’.6
மேற்கண்ட சான்றுகளை எல்லாம் நோக்குமிடத்து, ஆபீரர்கள் என்ற பழங்குடி ஒன்று இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு வெளியேயிருந்து வெகுகாலத்திற்கு முன்பே சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு பரவியிருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.
காலம்
பந்தர்க்கார், ஜெயஸ்வால் போன்ற அறிஞர்கள் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் பரவினர் என்று குறிக்கினர். ஆனால் பதஞ்சலி முனிவர் இவர்களை ஆநிரவசிக (தூய்மையான) சூத்திரர்7 என்று பேசுவதால் இவரது காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே இவர்கள் வந்திருக்கவேண்டும் என்று தெரிகிறது. ‘கி.மு.3இல் ஆபிரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம்’8 என்று ஜெயஸ்வாலும் சந்தேகிக்கிறார்.
கிடைத்திருக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் ஊகிக்கும்போது, ஆபீரர்கள் கிறித்து பிறப்புக்குப் பல நூற்றாண்டுக்கு முன்பே சிந்து நதியைக் கடந்து தற்போதுள்ள இராஜஸ்தான் பகுதிக்கு வடமேற்கு நதி ஓரத்தில் தங்கள் குடியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. பின்னர் அங்கிருந்து,  மகாபாரதம், புராணங்கள் குறிப்பிடுவதைப்போல அவர்கள் பஞ்சாப், மதுவனம், சொளராஷ்டிரம், கொங்கணம் என்று சொல்லப்படக்கூடிய பகுதிகளில் பரவி வாழ்ந்திருக்கலாம் என்று அறியமுடிகிறது.
ஆபிரர்களின் இனம்
ஆபீரர்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று சிலரும்நாகரிகமடைந்த ஆரிய இனத்தினர் என்று சிலரும் கருதுகின்றனர்.10 வேறு சில அறிஞர்கள் ஆபிரர்கள் ஆரியர்கள் வருதற்கு முன்பே பஞ்சாப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் என்கின்றனர்11. ‘சில சரித்திர ஆசிரியர்கள் ஆகிர், ஆபிரர்  என்பவர்கள் திராவிடர்களின் சந்ததியினர் என்று கூறியுள்ளதாக’12 சி.பி.லோகநாதன் தெரிவிக்கின்றார்.
ஆபிர என்ற சொல்லுக்கு  இடையர், மாடுமேய்ப்பவர் என்று பொருள். இவர்களின் கடவுளான கிருஷ்ணன் என்ற பெயர் கருமை என்ற பொருளைத் தருவதாகும். ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து பல்லாண்டுகள் கழித்தே இவர்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு தக்க ஒரு சான்றாக, கிருஷ்ணன் இந்திர வழிபாட்டோடு கொண்ட முரண்பாட்டைக் கருதலாம். ‘ஆயர்பாடியைச் சேர்ந்தவர்கள் (பழைய வழக்கப்படி) இந்திரனுக்குப் படையலிட முற்படுகின்றனர். கிருஷ்ணன் அதைத் தடுக்கின்றான். நந்தகோபாலனை நோக்கி, “தந்தையே! நாம் உழவர்களுமல்லர், வணிகருமல்லர். இந்திரனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? கால்நடைகளையும் மலையுமே நமது தெய்வங்கள்” என்கிறான். பின்னர் தானே அந்த மலையாக நின்று அந்தப் படையலினை ஏற்கிறான். இந்திரவழிபாட்டைத் தன்னை நோக்கித் திருப்பவே கிருஷ்ணன் இவ்வழியைக் கையாண்டான் என்று வில்கின்சன் கருதுகிறார்’13 என்று தொ.பரமசிவம் கூறுகின்றார்.
கிருஷ்ணனுக்கும் ஆபீரர்களுக்குமான தொடர்பு
இந்துக்களிடையே மிகப் புகழ்பெற்ற ஒரு வழிபாடாக, இந்தியா முழுமையும் கிருஷ்ண வழிபாடு இருந்து வருகிறது. விஷ்ணு புராணம், பால சரிதம்,  மகாபாரதம், பாகவதம் என வைணவ சமயத்தின் பெரும்பாலானப் புராணங்களும் இதிகாசங்களும் கிருஷ்ணனுடைய வாழ்க்கையையும், ஓர் இடையனாக இடைச்சமூகத்தில் அவன் நிகழ்த்திய புதுமைகளையும் அவைப் போற்றிப் புகழ்ந்து கொண்டாடுகின்றன.
கிருஷ்ணன் தான் வாழும்போதே கடவுளாக வணங்கப்பெற்றான் என்பதை விஷ்ணு புராணம், பாகவதம், பாலசரிதம் உள்ளிட்டப் புராணங்கள் எடுத்தியம்புகின்றன. கிருஷ்ணன் யார், கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்ட வழிபாட்டு முறை தமிழகத்தில் எப்போது கால்கொண்டது ஆகியன பற்றி விவாக ஆராய வேண்டிய ஒன்றாகும்.
கிருஷ்ணன் யார்?
கிருஷ்ணன், ஆபிரர் என்று முன்பு வழங்கப்பட்ட, தற்போதுள்ள அஹீர்களுடைய குலத்தைச் சார்ந்தவன் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இவர்கள் பீகார், சண்டிகர், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம், ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி,  சட்டீஷ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், திரிபுரா, உத்ரகாண்ட் என வடஇந்தியா முழுமையும் பரந்து வாழ்கின்றனர்.
கிருஷ்ணனுடைய இளம்பருவம், மேய்ச்சல் நிலப்பின்னணி அவனை ஓர் இடையனாகவே சித்தரிப்பது கண்கூடு. வைணவ சமயம் பல்வேறு காலங்களில் பல்வேறு சூழலில்  பிற இனக்குழுக்களின் வழிபாடுகளை உள்வாங்கிக் கொண்டது என்று வரலாற்றிஞர்கள் இயம்புவர். அதன்படி, ஆபிரர்களின் தலைவனாக வாழ்ந்து, அவர்களால் வழிபடப்பட்ட கிருஷ்ண வழிபாட்டை வைணவம் உள்வாங்கிக் கொண்டதாக பல அறிஞர்களும் கருதுகின்றனர்.
‘கிருஷ்ணருடைய இளம்பருவ மேய்ச்சல் நில பின்னணி அவரை ஆபீரர் இனமக்கள் வணங்கிய இளம் பருவக் கடவுளோடு ஒன்றாக்கியதன் விளைவே’14 என்று சுவீரா ஜெயஸ்வால் கூறுகின்றார்.  ‘கிருஷ்ணனுடைய வளர்ப்புப் பெற்றோர் வடமதுரைக் கருகில் மதுவனத்தி லிருந்து துவாரகையைச் சுற்றியுள்ள அனுபா, ஆனர்த்தா எனும் இடங்கள் வரை பரவியிருந்த ஆபிர இனமக்களைச் சார்ந்தவர்கள்’15 என்று ஆர்.ஜி.பந்தர்க்கார் கூறுகின்றார். டி.டி.கோசாம்பியும் கிருஷ்ணனைக், ‘கிறித்தவர்களின் காலம் துவங்கியபோது வாழ்ந்துவந்த ஆபீரர் எனும் ஆநிரை வளர்ப்பு மக்களோடு உறவு ஏற்படுத்த வகைசெய்கிறது’16 என்று கூறுகின்றார்.
கிருஷ்ணன் – ஆபீரர்தொடர்பு
கிருஷ்ணனை ஆபீரர்களோடு தொடர்புபடுத்தவும்  அவன் ஆபீரர் இனத்தைச் சார்ந்தவன் என்று கூறுவதற்கும் மேற்கூறிய அறிஞர்கள் தரும் விளக்கங்களாவன,

  • ஹரி வமிசமும், பாசகவியின் பால சரிதமும் கிருஷ்ணன் கோசலையில் வளர்க்கபட்டான் என்று கூறுகின்றன. மதர கோச நிகண்டின்படி கோசலைக்கு ஆபீரப்பள்ளி எனும் பொருள் உண்டு. மேலும் இஃது ஆபீரா, பல்லவா என்ற  சொற்களும்  கோபா, கோபாலா என்ற சொற்களும் ஒரே பொருளை உடையன என்றும் இந்நிகண்டு பொருள் தருகிறது.(பந்தர்கார்,1913)
  • ஆபீரர்கள் நாடோடி இனத்தவர்கள். ஒரு நாடோடி இனத்திற்கு தடையற்ற பாலுறவு தேவை, ஆகவே அவர்களுடைய கடவுளான கிருஷ்ணனும் இளமையும் சிற்றின்ப நாட்டமும், விளையாட்டு புத்தியுடையவருமான இருக்கிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991)
  • ‘விஷ்ணு புராணத்தில் கிருஷ்ணன் தம் இனத்தவரை நோக்கி அவர்கள் நிலமோ வீடுகளோ இன்றி வண்டிகளையும் ஆனிரைகளையும் ஓட்டித்திரிவதனால் பசுக்களும், மலைகளுமே அவர்களுக்கு தெய்வங்கள் என்று சொல்கிறார்’ (சுவீரா ஜெயஸ்வால், 1991). இதன் மூலம் நாடோடி இனமான ஆபிரர்களையே கிருஷ்ணன் இவ்வாறு கூறுகின்றான் என்பது பெறப்படுகிறது.
  • ‘வாசுதேவர் கம்சனுடைய சிறையிலிருந்து விடுபட்டவுடன் நந்தருடைய வண்டிக்கருகில் சென்றார். தமக்குக் குழந்தைப் பிறந்ததறிந்த நந்தர் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்ததனைக் கண்டார்’ என்று வேறொருப் பகுதியில் விஷ்ணுபுராணம் கூறுவதாக பந்தர்கார் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக்காட்டுகின்றார்.
  • ‘மகாபாரத்ததில் கிருஷ்ணனுடைய ஜனங்கள் கடைப்பிடித்த இன்றும்கூட வரலாற்று ரீதியான ஆபிரர்கள் நடத்திவருவதுமான கடத்தல் முறைத் திருமணங்களும் இழிவாகவே கருதப்பட்டன’ என்று கோசாம்பி குறிப்பிடுகின்றார் (டி.டி.கோசாம்பி, 2006). கிருஷ்ணனே இத்தகைய கடத்தல்முறை மணத்தின் மூலம்தான் ருக்மணியை மணந்ததாக புராணங்களின் மூலம் நாம் அறிகின்றோம்.
  • தமது எட்டாவது அவதாரத்தில் ஆபீரர்கள் மத்தியில் தான் பிறக்கப்போவதாக விஷ்ணு கூறியதாக விஷ்ணு புராணம் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக் காட்டுகிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991).

மகாபாரதத்தில் மௌசால பருவத்தில், பெரிய அழிவுக்குப் பின் எஞ்சிய யாதவர்களை அர்சுனன் அழைத்து வருவதாக ஒரு குறிப்பு உண்டு. அதில் வருவதாவதுआभीरैरभिभूयाजौ हृताः पञ्चनदालयैः ॥धनुरादाय तत्राहं नाशकं तस्य पूरणे।यथा पुरा च मे वीर्यं भुजयोर्न महामुने।उपदेष्टुं मम श्रेयो भवानर्हति सत्तम॥’17அதாவது,
“ஓ முனிவர்களே… இதைக் கேளுங்கள், இதைவிட எனக்கு வலி வேறு என்ன இருக்க முடியும். வலிமையுடைய ஆபிரர்களின் பஞ்சநத பகுதியினைக் கடந்து வருகையில் அவர்கள் ஆயிரக்கணக்கான விருஷ்ணி இனப் பெண்களைக் கவர்ந்து கொண்டார்கள்.என்னால் அவர்களோடு விற்போர் செய்யமுடியவில்லை. என் கையில் வலிமையில்லை. ஓ! ஆண்களில் சிறந்தவர்களே எனக்கு நல்ல ஆலோசனையை வழங்குங்கள்.”
என்று அர்ச்சுனன் சொல்வதாக வருகிறது. கோசம்பி, ஜெயஸ்வால் போன்றோர் குறிப்பிடும் பெண்களை கடத்தல் முறை ஆபிரர்களிடையே இருந்துள்ளமைக்கு மாபாரதம் சான்று தருகிறது. கிருஷ்ணனும் இவ்விதம்தான் ருக்மணியை அடைந்தான் என்று முன்பே கண்டோம்.
ஹரிவமிசம் முதலானப் புராணங்கள் கூறும் கோசலை என்னும் சொல்லுக்கு ஆபீரப்பள்ளி என்றொரு பொருள் உள்ளமையாலும், சிற்றின்ப வேட்கை, கேளிக்கை ஆகியன உடையவனாகக் கிருஷ்ணன் காணப்படுவதாகையாளும், வண்டிகளில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் ஆபீரர்களை கிருஷ்ணன் தன்னுடைய உறவினர்கள் என்று கூறுவதாலும், ஆபீரர்களின் வரலாற்று ரீதியான கடத்தல் முறை (இதனை வடநூலார் இராக்கதம் என்பர்) மணத்தை கிருஷ்ணனே செய்தமையாலும் இன்னபிற காரணங்களாலும், சான்றுகளின் படியும் கிருஷ்ணன் ஆபீர இனத்தவன் என்று முடிவு கூறலாம். கிருஷ்ணனை வைணவத்தில் ஐக்கியப்படுதிய போது, அவனுடைய முழு அடையாளங்களும் புராணங்களில் கூறப்பட்டுள்ளபடி மாறிப்போயுள்ளதால், மேற்கண்ட குறிப்புகளின்வழியே அவன் ஆபீர இனத்தவன் என்னும் முடிவுக்கு வரமுடிகிறது.
புராணங்கள், இதிகாசங்கள் யாவும் கிருஷ்ணனை யயாதியின் வழியில் வந்தவன் என்றும், யாதவன் என்றும் பேசுவது இப்படியான பெயர் கொண்ட இடைச்சமூகத்தோடு ஆபிரர் இனம் கலந்ததையேக் காட்டுகிறது. பிற்காலத்தில் கிருஷ்ணன் யாதவர்களின் கடவுள் என்றே பேசப்பட்டுள்ளான்.
தென்னிந்தியாவுடனானத் தொடர்பு
தமிழகத்திற்கு பல்லாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து வந்த வேளிர்கள் ஆபிரர்களாக இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. இஃதுபற்றி வேளிர் வரலாறு எழுதிய இராகவையங்கார் தரும் செய்திகளாவன,
தமிழகத்துப் பண்டைக்கால முதலே உள்ள வேளிர் என்ற கூட்டத்தார் திருமால்வழியினராய்த் துவராபதியினின்று… பண்டைவேளிர் தமிழ் நாட்டுக் குடியேறிய காலம் கி.மு.10ஆம் நூற்றாண்டாகக் கொள்ளுதல் ஒருவாறு பொருந்தும் மென்பதும், வேளிர் பெருங்கூட்டந் தென்னாடு புகுந்து வாழ்ந்த வரலாறு இஃது என்பதும், அன்னோர் பெருமை இன்னவென்பதும் புலப்படுமாறு கண்டுகொள்க.18
கண்ணனது ஆபீர-யாதவர்கள்தாம் வேளிர்கள் என்று இராகவையங்கார் கொள்வதாக நாம் இங்குக் கொள்ளலாம்.
‘கிருஷ்ணனின் வழிவந்த வேளிர்கள் துவாரகையில் இருந்து, மராட்டிம், கர்நாடகம் வழியாக தமிழகம் வந்தனர்’19 என்று வரலாற்றில் யாதவர்கள் என்ற நூலை எழுதிய சி.பி.லோகநாதன் கூறுகின்றார்.
ஆபீரர்களின் அரசு மேற்கு தக்காணத்தில் சாக சத்திரபர்கள், சாதவாகனர் கீழ் சுறுசுறுப்பாக இருந்துவந்துள்ளதாக ஜெயஸ்வால் கூறுகின்றார். கி.பி.181ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு பாபகன் என்னும் ஆபிர சேனாதிபதியின் மகனாகிய சேனாதிபதி ருத்ரபதியைப் பற்றிப் பேசுகிறது. நாசிக்குகைக் கல்வெட்டொன்று கி.பி.3 சேர்ந்த ஈஸ்வர சேனர் என்னும் ஆபிரர்களின் அரசரைப் பற்றிக் குறிப்படுகிறது.20 கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்புத் தொடங்கி இவர்களது ஆட்சி பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் கிருஷ்ண வழிபாடு
இராகவையங்கார், லோகநாதன் ஆகியோர்களது கருத்துப்படியும், மேற்கண்டவாறு, தென்னிந்தியப்பகுதியில் ஆபிரர்களது தொல்லியல் சான்றுகள் படியும் அன்னோர் தென்னிந்தியப் பகுதிகளில் பரவியதை எடுத்துக்காட்டுகின்றன. கண்ணன் வழிவந்தோர் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர் என்பது இதன் மூலம் அறியற்பாலது.  இவர்களின் ஒரு பிரிவினரோ அல்லது  வேளிர்கள் என்று அழைக்கப்பட்ட ஆயர் அரசர்களாகவோ இருக்கலாம் என துணியலாம். அப்படியாயின் இவர்கள்தாம் தமிழகத்தில் கிருஷ்ண வழிபாட்டை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். தமிழகம் வந்த ஆபிரர்கள் என்ற வேளிர்களின் கிருஷ்ண வழிபாடு, தமிழக இடையர்களுடைய இடையர் தெய்வ வழிபாடான ‘மால்’ வழிபாட்டோடு விரவப்பெற்றிருக்க வேண்டும். ‘முல்லை நிலத் தெய்வமான மால் வழிபாட்டோடு புராணங்கள் கூறும் கிருஷ்ணாவதார செய்திகளும் கலந்துவிட்டதைச் சங்கப் பாடல்களில் காணலாம்’21 என்ற தொ.பரமசிவத்தின் கூற்று, மேற்கூறிய கருத்திற்கு அரண் செய்யும். இராகவையங்கார் சொல்வதைப்போன்று அவர்கள் கி.மு.10ம் நூற்றாண்டில் தமிழகம் வந்தனர் என்பதற்கு போதிய சான்று இல்லாத அதே சமயத்தில், கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் அவர்கள் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் தமிழத்திற்கு வந்திருக்கலாம் என்று துணியலாம்.
ஆஹிர் என்னும் சொல்லின் சமஸ்கிருத வடிவம் ஆபீர என்றும், ஆபீரர்களின் மொழி, ஆபீர பாஷா என்றும் இதனை பரதர், தம் நாட்டிய சாஸ்திரத்தில் ‘அபப்ரம்சத்’ என்றும் குறிப்பிடுகிறார் என்றும் எஸ்.இராமசந்திரன் குறிப்பிடுகின்றார்.22
சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் ஒன்று, கிருஷ்ணனின் பெண்களை அண்டர் மகளிர் என்று குறிக்கிறது
வாழியர் நீயே வடாஅதுவண்புனல் தொழுநை வார்மணல் அகன்துறைஅண்டர் மகளிர் தண்தழை உடீஇயர்மரம்செல மிதித்த மாஅல் போல (அகம்:59:3-6)
வடதிசையில் உள்ள யமுனைத் துறையில் நீராடும் அண்டர் மகளிரின் ஆடையை ஒளித்துப்பின் அவற்றைக் குருந்தமரக் கிளையை வளைத்துத் தந்த கண்ணபிரானைப் போல’ என்பது இதன் பொருளாகும்.
இங்கு அண்டர் மகளிரது ஆடையைக் கண்ணன் எடுத்து ஒளித்துவைத்தான் என்பது பெறப்படுகிறது. அண்டர் என்னும் சொல்லுக்கு அண்டி வாழ்வோர் என்றும் பொருளுண்டு. ஊர்புறத்தினையடுத்த பகுதிகளில் அவர்கள் தொகுப்பாக வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றிருக்கலாம். தவிரவும் தமிழகத்தை அண்டி வந்தோர் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு, தமிழகத்தில் வாழ்ந்த அண்டர் குடி யமுனை நதி பகுதியில் வாழ்ந்த கிருஷ்ணனின் பெண்களோடு தொடர்புபடுத்தியிருப்பது இங்கு புதிய ஐயத்தை எழுப்பியுள்ளது. தென்னகம் நோக்கி இடம்பெயர்ந்த கிருஷ்ணனின் குடியினரில் அண்டர்களும் ஒரு பிரிவினராக இருக்கலாம் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்துகிறது.
இதற்கான வலுவான சான்றுகள் ஏதும் இல்லை எனினும் இப்படி இணைத்து எண்ணவும் வழிவகையுண்டு. மேற்படி தொடராய்வுகள்தாம் இதற்கான தீர்வினைத் தரும்.

அடிக்குறிப்புகள்

  1. 1.   மொ.அ.துரை அரங்கசாமி, சங்க காலச் சிறப்பு பெயர்கள், பாரி நிலையம், 2014, ப.274
  2. மேலது, ப.274
  3. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107
  4. பி.வி.ஜகதீச ஐயர், புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்,2009, ப.20 &165.
  5. en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014
  6. Sudhakar Chattopadhyaya, Evolution of Hindu Sects, 1970, p.72.
  7. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107
  8. மேலது, ப.107
  9. en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014
  10. R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System,1913. p.52.
  11. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.105
  12. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.24
  13. தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.138.
  14. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், 1991, ப.104
  15. R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System, 1913. p.51.
  16. டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா,2006,ப.207
  17. மகாபாரதம், மௌசால பருவம்,  http://prramamurthy1931.blogspot.in/2013/01/mahabharata-mausala-parva.html/23-01-2014.
  18. மு.இராகவையங்கார், வேளிர் வரலாறு, 2004, ப.45-47
  19. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.29
  20. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.107
  21. தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.139
  22. 13, அக்டேபர் 2015 அன்று உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தில் கீழடி அகழ்வாய்வு பற்றிய ஒருநாள் கருத்தரங்கில் திரு. எஸ் இராமச்சந்திரன் அவர்கள் சொல்லிய செய்தி. அவருக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்..

கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை

கிருஷ்ணனும் ஆபீரரும்

ஆய்வுக்கட்டுரை

இந்துக்களிடையே மிகப் புகழ்பெற்ற ஒரு வழிபாடாக, இந்தியா முழுமையும் கிருஷ்ண வழிபாடு இருந்து வருகிறது. விஷ்ணு புராணம், பால சரிதம்,  மகாபாரதம், பாகவதம் என வைணவ சமயத்தின் பெரும்பாலானப் புராணங்களும் இதிகாசங்களும் கிருஷ்ணனுடைய வாழ்க்கையையும், ஓர் இடையனாக இடைச்சமூகத்தில் அவன் நிகழ்த்திய புதுமைகளையும் அவைப் போற்றிப்புகழ்ந்து கொண்டாடுகின்றன. மகாபாரதத்தில் கிருஷ்ணனுடைய பங்களிப்பு மிக முக்கியமானது. சில வரலாற்றிஞர்கள் மகாபாரதம் கௌரவர்கள், பாண்டவர்கள் என்னும் பரதப் பெருங்குடி பிரிவுகளிடையே நடைபெற்ற போராட்டத்தை சித்தரிக்கிறது1 என்று கூறுகின்றனர். இஃது நிகழ்ந்தது கி.மு.10ஆக இருக்கலாம் என்று ஆர்.எஸ். சர்மா2, சி.பி.லோகநாதன்3 போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.

கிருஷ்ணன் தான் வாழும்போதே கடவுளாக வணங்கப்பெற்றான் என்பதை விஷ்ணு புராணம், பாகவதம், பாலசரிதம் உள்ளிட்டப் புராணங்கள் எடுத்தியம்புகின்றன. கிருஷ்ணன் யார், கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்ட வழிபாட்டு முறை தமிழகத்தில் எப்போது கால்கொண்டது ஆகியன பற்றி விவரிக்க முயலுகிறது இக்கட்டுரை.
கிருஷ்ணன் யார்?
கிருஷ்ணன் யது குலத்தில் உதித்தவன் என்றும் யாதவ அரசனென்றும் புராணங்கள் இயம்பியுள்ளன. ஆனால் கிருஷ்ணனைப் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள், புராணங்கள் தரும் யது, யயாதி, யாதவத் தொடர்பை மறுக்கின்றனர். கிருஷ்ணன், ஆபிரர் என்று முன்பு வழங்கப்பட்ட, தற்போதுள்ள அஹீர்களுடைய குலத்தைச் சார்ந்தவன் என்று மேலும் கூறுகின்றனர். ஆஹீர்கள் பீகார், சண்டிகர், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், உத்திரபிரதேசம், ஒரிசா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி,  சட்டீஷ்கர், ஹரியானா, ஜார்க்கண்ட், திரிபுரா, உத்ரகாண்ட் என வடஇந்தியா முழுமையும் பரந்து வாழ்கின்றனர்.
கிருஷ்ணனுடைய இளம்பருவம், மேய்ச்சல் நிலப்பின்னணி அவனை ஓர் இடையனாகவே சித்தரிப்பது கண்கூடு. வைணவ சமயம் பல்வேறு காலங்களில் பல்வேறு சூழலில்  பிற இனக்குழுக்களின் வழிபாடுகளை உள்வாங்கிக் கொண்டது என்று வரலாற்றிஞர்கள் இயம்புவர். அதன்படி, ஆபிரர்களின் தலைவனாக வாழ்ந்து, அவர்களால் வழிபடப்பட்ட கிருஷ்ண வழிபாட்டை வைணவம் உள்வாங்கிக் கொண்டதாக பல அறிஞர்களும் கருதுகின்றனர்.
‘கிருஷ்ணருடைய இளம்பருவ மேய்ச்சல் நில பின்னணி அவரை ஆபீரர் இனமக்கள் வணங்கிய இளம் பருவக் கடவுளோடு ஒன்றாக்கியதன் விளைவே’4 என்று சுவீரா ஜெயஸ்வால் கூறுகின்றார்.  ‘கிருஷ்ணனுடைய வளர்ப்புப் பெற்றோர் வடமதுரைக் கருகில் மதுவனத்தி லிருந்து துவாரகையைச் சுற்றியுள்ள அனுபா, ஆனர்த்தா எனும் இடங்கள் வரை பரவியிருந்தவர்களும் இக்காலத்தில்  அஹீர்கள் என்று வழங்கப்படுபவர்களுமான ஆபிர இனமக்களைச் சார்ந்தவர்கள்’5 என்று ஆர்.ஜி.பந்தர்க்கார் கூறுகின்றார். டி.டி.கோசாம்பி கிருஷ்ணனைக், ‘கிறித்தவர்களின் காலம் துவங்கியபோது வாழ்ந்துவந்த இன்றுள்ள அஹீர் ஜாதியின் பூர்வக்குல முதல்வர்களாகவும் இருந்த  ஆபீரர் எனும் ஆநிரை வளர்ப்பு மக்களோடு உறவு ஏற்படுத்த வகைசெய்கிறது’6 என்று கூறுகின்றார். சி.பி.லோகநாதனும் ‘அஹீர்கள் கிருஷ்ணனின் வழிவந்த யாதவர்கள்’ என்று தன்னுடைய ‘வரலாற்றில் யாதவர்கள்’7 என்னும் நூலில் கூறுகின்றார். மேற்கண்ட அறிஞர்களின் கூற்றின்படி கண்ணன் ஆபிர இனத்தினனாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கண்ணனை இவ்வினதாரோடு தொடர்புபடுத்த, அறிஞர்கள் காட்டும் தொடர்புகளைத் தொடர்ந்து காணலாம்.
கிருஷ்ணன் – ஆபீரர்தொடர்பு
கிருஷ்ணனை ஆபீரர்களோடு தொடர்புபடுத்தவும்  அவன் ஆபீரர் இனத்தைச் சார்ந்தவன் என்று கூறுவதற்கும் மேற்கூறிய அறிஞர்கள் தரும் விளக்கங்களாவன,

  • ஹரி வமிசமும், பாசகவியின் பால சரிதமும் கிருஷ்ணன் கோசலையில் வளர்க்கபட்டான் என்று கூறுகின்றன. மதர கோச நிகண்டின்படி கோசலைக்கு ஆபீரப்பள்ளி எனும் பொருள் உண்டு. மேலும் இஃது ஆபீரா, பல்லவா என்ற  சொற்களும்  கோபா, கோபாலா என்ற சொற்களும் ஒரே பொருளை உடையன என்றும் இந்நிகண்டு பொருள் தருகிறது.(பந்தர்கார்,1913)
  • ஆபீரர்கள் நாடோடி இனத்தவர்கள். ஒரு நாடோடி இனத்திற்கு தடையற்ற பாலுறவு தேவை, ஆகவே அவர்களுடைய கடவுளான கிருஷ்ணனும் இளமையும் சிற்றின்ப நாட்டமும், விளையாட்டு புத்தியுடையவருமான இருக்கிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991)
  • ‘விஷ்ணு புராணத்தில் கிருஷ்ணன் தம் இனத்தவரை நோக்கி அவர்கள் நிலமோ வீடுகளோ இன்றி வண்டிகளையும் ஆனிரைகளையும் ஓட்டித்திரிவதனால் பசுக்களும், மலைகளுமே அவர்களுக்கு தெய்வங்கள் என்று சொல்கிறார்’ (சுவீரா ஜெயஸ்வால், 1991). இதன் மூலம் நாடோடி இனமான ஆபிரர்களையே கிருஷ்ணன் இவ்வாறு கூறுகின்றான் என்பது பெறப்படுகிறது.
  • ‘வாசுதேவர் கம்சனுடைய சிறையிலிருந்து விடுபட்டவுடன் நந்தருடைய வண்டிக்கருகில் சென்றார். தமக்குக் குழந்தைப் பிறந்ததறிந்த நந்தர் பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்ததனைக் கண்டார்’ என்று வேறொருப் பகுதியில் விஷ்ணுபுராணம் கூறுவதாக பந்தர்கார் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக்காட்டுகின்றார்.
  • ‘மகாபாரத்ததில் கிருஷ்ணனுடைய ஜனங்கள் கடைப்பிடித்த இன்றும்கூட வரலாற்று ரீதியான ஆபிரர்கள் நடத்திவருவதுமான கடத்தல் முறைத் திருமணங்களும் இழிவாகவே கருதப்பட்டன’ என்று கோசாம்பி குறிப்பிடுகின்றார் (டி.டி.கோசாம்பி, 2006). கிருஷ்ணனே இத்தகைய கடத்தல்முறை மணத்தின் மூலம்தான் ருக்மணியை மணந்ததாக புராணங்களின் மூலம் நாம் அறிகின்றோம். 
  • தமது எட்டாவது அவதாரத்தில் ஆபீரர்கள் மத்தியில் தான் பிறக்கப்போவதாக விஷ்ணு கூறியதாக விஷ்ணு புராணம் கூறுவதை ஜெயஸ்வால் எடுத்துக் காட்டுகிறார். (சுவீரா ஜெயஸ்வால், 1991).

மகாபாரதத்தில் மௌசால பருவத்தில், பெரிய அழிவுக்குப் பின் எஞ்சிய யாதவர்களை அர்சுனன் அழைத்து வருவதாக ஒரு குறிப்பு உண்டு. அதில் வருவதாவதுआभीरैरभिभूयाजौ हृताः पञ्चनदालयैः ॥धनुरादाय तत्राहं नाशकं तस्य पूरणे।यथा पुरा च मे वीर्यं भुजयोर्न महामुने।उपदेष्टुं मम श्रेयो भवानर्हति सत्तम॥’8அதாவது,
“ஓ முனிவர்களே… இதைக் கேளுங்கள், இதைவிட எனக்கு வலி வேறு என்ன இருக்க முடியும். வலிமையுடைய ஆபிரர்களின் பஞ்சநத பகுதியினைக் கடந்து வருகையில் அவர்கள் ஆயிரக்கணக்கான விருஷ்ணி இனப் பெண்களைக் கவர்ந்து கொண்டார்கள்.என்னால் அவர்களோடு விற்போர் செய்யமுடியவில்லை. என் கையில் வலிமையில்லை. ஓ! ஆண்களில் சிறந்தவர்களே எனக்கு நல்ல ஆலோசனையை வழங்குங்கள்.”என்று அர்ச்சுனன் சொல்வதாக வருகிறது. கோசம்பி, ஜெயஸ்வால் போன்றோர் குறிப்பிடும் பெண்களை கடத்தல் முறை ஆபிரர்களிடையே இருந்துள்ளமைக்கு மாபாரதம் சான்று தருகிறது. கிருஷ்ணனும் இவ்விதம்தான் ருக்மணியை அடைந்தான் என்று முன்பே கண்டோம்.ஹரிவமிசம் முதலானப் புராணங்கள் கூறும் கோசலை என்னும் சொல்லுக்கு ஆபீரப்பள்ளி என்றொரு பொருள் உள்ளமையாலும், சிற்றின்ப வேட்கை, கேளிக்கை ஆகியன உடையவனாகக் கிருஷ்ணன் காணப்படுவதாகையாளும், வண்டிகளில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரும் ஆபீரர்களை கிருஷ்ணன் தன்னுடைய உறவினர்கள் என்று கூறுவதாலும், ஆபீரர்களின் வரலாற்று ரீதியான கடத்தல் முறை (இதனை வடநூலார் இராக்கதம் என்பர்) மணத்தை கிருஷ்ணனே செய்தமையாலும் இன்னபிற காரணங்களாலும், சான்றுகளின் படியும் கிருஷ்ணன் ஆபீர இனத்தவன் என்று முடிவு கூறலாம். கிருஷ்ணனை வைணவத்தில் ஐக்கியப்படுதிய போது, அவனுடைய முழு அடையாளங்களும் புராணங்களில் கூறப்பட்டுள்ளபடி மாறிப்போயுள்ளதால், மேற்கண்ட குறிப்புகளின்வழியே அவன் ஆபீர இனத்தவன் என்னும் முடிவுக்கு வரமுடிகிறது.
ஆபிரர்களின் தோற்றம்
ஆபிரர்களின் தோற்றம், பரவல் குறித்து பலரும் பலவிதக் கருத்துக்களைத் தருகிறார்கள். ஆபிரர்களைப் பற்றி ஜெயஸ்வால் தரும் தொகுப்பானச் சில செய்திகளாவன,
‘ஆபிரர்கள் முதலில் பஞ்சாபில் வாழ்ந்து வந்தனர். பின் ராஜபுதனத்தை நோக்கி முன்னேறிச் சென்றனர். கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் அவர்கள் கீழைச் சிந்து சமவெளிக்கும் பின்னர் அங்கிருந்து மேற்குத் தக்காணத்திலுள்ள சௌராஷ்டிரம், அபராந் ஆகிய பகுதிகளுக்கும் சென்றடைந்தனர்’ என்று தேபால மித்ரா தன்னுடைய த அபிராஸ் அண்ட் தேர் காண்ட்டிரிபியூசன் டு த இந்தியன் கல்சர் எனும் நூலில் கூறியுள்ளார். டி.சி.சர்க்கார் அவர்களை ஹரீட்டிற்கும் காண்ட ஹாருக்கும் நடுவிலுள்ள அபிரவன் என்ற நாட்டுடன் தொடர்பு படுத்திப் பேசுகிறார். அஸர்பெய்ஜான் எனும் இடத்திற்கருகில் வாழ்ந்து வந்த அபைரை என்ற மேய்ச்சல் நில மக்களே ஆபிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அவர்கள் வெளி நாட்டிலிருந்து தோன்றியவர்கள் என்ற கொள்கையை மிராஷியும் வேறு அறிஞர்களும் மறுத்து ஆபிரர்கள் ஆரியர் இந்தியாவிற்கு வருவதற்கு முன் பஞ்சாபில் வாழ்ந்து வந்த பழங்குடி மக்கள் என்பர்.பதஞ்சலி ஆபிரர்களை சூத்திர வருணத்தின் துணைச் சாதியர் எனக் குறிப்பிடுகின்றார்.தேவகார் குகைப் புடைப்புச் சிற்பம் கிருஷ்ணனுடைய வளர்ப்புப் பெற்றோரான நந்தரையும் யசோதையையும் வெளிப்படையாக எடுத்துக்காட்டும் தன்மை கொண்ட அன்னிய ஆடைகளை அணிந்திருந்ததைக் காட்டுகிறது. கிருஷ்ணருடைய ஆயர் குலத்தவர்களை குப்தர் காலத்து ஓவியர்கள் வெளி நாட்டினராகக் கருதியிருப்பதையே அச்சிற்பங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.9இப்படியாக ஆபிரர்களின் வரவு பற்றி பல தகவல்களைத் தருகிறார் ஜெயஸ்வால். புராதண இந்தியா  எனும் பழைய 56 தேசங்கள் என்ற நூலை எழுதிய பி.வி.ஜகதீச ஐயர் தரும் ஆபீரர்கள் பற்றி செய்திகளாவன,
ஆபீரதேசமானது ஸிந்து தேசத்திற்கு கிழக்கிலும் குந்தி (குந்தல) தேசங்களுக்கு நேர் மேற்கிலும் த்ரிகூட மலைக்கு வடக்கிலும் அகன்ற ஒரு பெரிய பூமியில் இருக்கிறது.… இந்த தேசத்திற்கு மேற்கு எல்லையில் ஓடும் அந்த பெரிய ஸிந்து நதியே இதற்கு முக்கிய நதியாகும்.10என்று கூறுகின்றார்.
மேலும் ‘புராண ஆபிரர்கள் கிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு இடம் பெயர்ந்தவர்கள் என ரெஜினால்ட் எட்வர்ட் என்தோவன் எனும் பிரிட்டிஷ் அறிஞர் கூறுகின்றார். ஹக் நெவில் எனும் அறிஞர் அபைரா எனும் பழங்குடி மக்கள் மெசபடோமியாவிலிருந்து  நதியைக் கடந்து, இந்தியாவின் உட்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கருதுகிறார். அவர்களே ஆபிரர்கள் எனப்பட்ட அஹீர்கள் என்கிறார்.’11

மகாபாரதத்தில் மௌசால பருவம் அவர்கள் பஞ்சநதத்திற்கு அருகில் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறது. ‘அபீரியா என வழங்கப்பட்ட ஆபிரர் நாடு, சிந்துவெளிப் பிரதேசத்தில் அமைந்திருந்ததாக டாலமி குறிப்பிடுகிறார்’.12
மேற்கண்ட சான்றுகளை எல்லாம் நோக்குமிடத்து, ஆபீரர்கள் என்ற பழங்குடி ஒன்று இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு வெளியேயிருந்து வெகுகாலத்திற்கு முன்பே சிந்து நதியைக் கடந்து இந்தியாவின் உட்பகுதிக்கு பரவியிருக்கவேண்டும் என்று ஊகிக்கலாம்.
காலம்
இவர்கள் எந்த நூற்றாண்டில் பரவினர் என்பது விவாதத்திற்கு வழிவகுப்பதாகவே உள்ளது. ஏனெனில் பந்தர்க்கார்,ஜெயஸ்வால் போன்ற அறிஞர்கள் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் பரவினர் என்று குறிக்கினர். ஆனால் பதஞ்சலி முனிவர் இவர்களை ஆநிரவசிக (தூய்மையான) சூத்திரர்13 என்று பேசுவதால் இவரது காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பே எனத் தெரிகிறது. ‘கி.மு.3இல் ஆபிரர்கள் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கலாம்’14 என்று ஜெயஸ்வாலும் சந்தேகிக்கிறார்.
கிடைத்திருக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் ஊகிக்கும்போது, ஆபீரர்கள் கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே சிந்து நதியைக் கடந்து தற்போதுள்ள இராஜஸ்தான் பகுதிக்கு வடமேற்கு நதி ஓரத்தில் தங்கள் குடியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. பின்னர் அங்கிருந்து,  மகாபாரதம், புராணங்கள் குறிப்பிடுவதைப்போல அவர்கள் பஞ்சாப், மதுவனம், சொளராஷ்டிரம், கொங்கணம் என்று சொல்லப்படக்கூடிய பகுதிகளில் பரவி வாழ்ந்திருக்கலாம் என்று அறியமுடிகிறது.
ஆபிரர்களின் இனம்
ஏ.பி. கர்மாகர் புராணங்களின் சான்றுபடி ஆபீரர்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்பார்.15 இவர்கள் நாகரிகமடைந்த ஆரிய இனத்தினர் என்று பந்தர்கார் கூறுகின்றார்.16 மிராஷியும் வேறு அறிஞர்களும் ஆபிரர்கள் ஆரியர்கள் வருதற்கு முன்பே பஞ்சாப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் என்கின்றனர்17. ‘சில சரித்திர ஆசிரியர்கள் ஆகிர், ஆபிரர்  என்பவர்கள் திராவிடர்களின் சந்ததியினர் என்று கூறியுள்ளதாக’18 சி.பி.லோகநாதன் தெரிவிக்கின்றார்.
ஆபிர என்ற சொல்லுக்கு  இடையர், மாடுமேய்ப்பவர் என்று பொருள். இவர்களின் கடவுளான கிருஷ்ணன் என்ற பெயர் கருமை என்ற பொருளைத் தருவதாகும். தமிழில் வழங்கப்படும் கண்ணன் எனும் சொல்லுக்குக் கண்களையுடையவன், கருமை என்று பொருள் கூறப்படுகிறது. ஆக இவர்கள் திராவிடர்களைப் போன்று கருமைநிறம் கொண்டவர்கள் என்று கொள்வதில் தவறில்லை.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து பல்லாண்டுகள் கழித்தே இவர்கள் இந்தியாவில் இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு தக்கதொரு சான்றாக, கிருஷ்ணன் இந்திர வழிபாட்டோடு கொண்ட முரண்பாட்டைக் கருதலாம். ‘ஆயர்பாடியைச் சேர்ந்தவர்கள் (பழைய வழக்கப்படி) இந்திரனுக்குப் படையலிட முற்படுகின்றனர். கிருஷ்ணன் அதைத் தடுக்கின்றான். நந்தகோபாலனை நோக்கி, “தந்தையே! நாம் உழவர்களுமல்லர், வணிகருமல்லர். இந்திரனுக்கும் நமக்கும் என்ன தொடர்பு? கால்நடைகளையும் மலையுமே நமது தெய்வங்கள்” என்கிறான். பின்னர் தானே அந்த மலையாக நின்று அந்தப் படையலினை ஏற்கிறான். இந்திரவழிபாட்டைத் தன்னை நோக்கித் திருப்பவே கிருஷ்ணன் இவ்வழியைக் கையாண்டான் என்று வில்கின்சன் கருதுகிறார்’19 என்று தொ.பரமசிவம் கூறுகின்றார்.
யாதவரும் கிருஷ்ணனும்
யாதவர்களோடு கிருஷ்ணன் இணைத்துப் பேசப்படுவதை பற்றி, கோசம்பி கருதுவதாவது, ‘இடைக்காலத்தில்  யாதவர்கள் அல்லது ஜாதவர்கள் ஊதியத்திற்காக பிராமணர்கள் அளித்த புரட்டான வம்சாவளியால் கிருஷ்ணருடைய யதுக்களுடன் பொருத்தப்பட்டுத் திடீர் உயர்நிலையை அடைந்தவர்களாவர் என்றும், கிருஷ்ணனின் கரிய நிறமும் பூர்வகுடி மக்களுடன் ஆரியர்கள் கொண்ட ஒருமைபாட்டும் ஒரு நன் நல்லிணக்க முயற்சியாகவே கருதலாம்’ என்றும் கருதுகிறார்.20
புராணங்கள், இதிகாசங்கள் யாவும் கிருஷ்ணனை யயாதியின் வழியில் வந்தவன் என்றும், யாதவன் என்றும் பேசுவது இப்படியான பெயர் கொண்ட இடைச்சமூகத்தோடு ஆபிரர் இனம் கலந்ததையேக் காட்டுகிறது. பிற்காலத்தில் கிருஷ்ணன் யாதவர்களின் கடவுள் என்றே பேசப்பட்டுள்ளான்.
தென்னிந்தியாவுடனானத் தொடர்பு
தமிழகத்திற்கு பல்லாண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து வந்த வேளிர்கள் ஆபிரர்களாக இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது. இஃதுபற்றி வேளிர் வரலாறு எழுதிய இராகவையங்கார் தரும் செய்திகளாவன,
தமிழகத்துப் பண்டைக்கால முதலே உள்ள வேளிர் என்ற கூட்டத்தார் திருமால்வழியினராய்த் துவராபதியினின்று… பண்டைவேளிர் தமிழ் நாட்டுக் குடியேறிய காலம் கி.மு.10ஆம் நூற்றாண்டாகக் கொள்ளுதல் ஒருவாறு பொருந்தும் மென்பதும், வேளிர் பெருங்கூட்டந் தென்னாடு புகுந்து வாழ்ந்த வரலாறு இஃது என்பதும், அன்னோர் பெருமை இன்னவென்பதும் புலப்படுமாறு கண்டுகொள்க.21கண்ணனது ஆபீர-யாதவர்கள்தாம் வேளிர்கள் என்று இராகவையங்கார் கொள்வதாக நாம் இங்குக் கொள்ளலாம்.
‘கிருஷ்ணனின் வழிவந்த வேளிர்கள் துவாரகையில் இருந்து, மராட்டிம், கர்நாடகம் வழியாக தமிழகம் வந்தனர்’22 என்று வரலாற்றில் யாதவர்கள் என்ற நூலை எழுதிய சி.பி.லோகநாதன் கூறுகின்றார்.
ஆபீரர்களின் அரசு மேற்கு தக்காணத்தில் சாக சத்திரபர்கள், சாதவாகனர் கீழ் சுறுசுறுப்பாக இருந்துவந்துள்ளதாக ஜெயஸ்வால் கூறுகின்றார். கி.பி.181ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு பாபகன் என்னும் ஆபிர சேனாதிபதியின் மகனாகிய சேனாதிபதி ருத்ரபதியைப் பற்றிப் பேசுகிறது. நாசிக்குகைக் கல்வெட்டொன்று கி.பி.3 சேர்ந்த ஈஸ்வர சேனர் என்னும் ஆபிரர்களின் அரசரைப் பற்றிக் குறிப்படுகிறது.23 கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முன்புத் தொடங்கி இவர்களது ஆட்சி பற்றிய தொல்லியல் சான்றுகள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் கிருஷ்ண வழிபாடு
இராகவையங்கார், லோகநாதன் ஆகியோர்களது கருத்துப்படியும், மேற்கண்டவாறு, தென்னிந்தியப்பகுதியில் ஆபிரர்களது தொல்லியல் சான்றுகள் படியும் அன்னோர் தென்னிந்தியப் பகுதிகளில் பரவியதை எடுத்துக்காட்டுகின்றன. கண்ணன் வழிவந்தோர் தமிழகத்திற்கு குடிபெயர்ந்தனர் என்பது இதன் மூலம் அறியற்பாலது.  இவர்களின் ஒரு பிரிவினரோ அல்லது  வேளிர்கள் என்று அழைக்கப்பட்ட ஆயர் அரசர்களாகவோ இருக்கலாம் என துணியலாம். அப்படியாயின் இவர்கள்தாம் தமிழகத்தில் கிருஷ்ண வழிபாட்டை அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். தமிழகம் வந்த ஆபிரர்கள் என்ற வேளிர்களின் கிருஷ்ண வழிபாடு, தமிழக இடையர்களுடைய இடையர் தெய்வ வழிபாடான ‘மால்’ வழிபாட்டோடு விரவப்பெற்றிருக்க வேண்டும். ‘முல்லை நிலத் தெய்வமான மால் வழிபாட்டோடு புராணங்கள் கூறும் கிருஷ்ணாவதார செய்திகளும் கலந்துவிட்டதைச் சங்கப் பாடல்களில் காணலாம்’24 என்ற தொ.பரமசிவத்தின் கூற்று, மேற்கூறிய கருத்திற்கு அரண் செய்யும். இராகவையங்கார் சொல்வதைப்போன்று அவர்கள் கி.மு.10ம் நூற்றாண்டில் தமிழகம் வந்தனர் என்பதற்கு போதிய சான்று இல்லாத அதே சமயத்தில், கிடைத்துள்ள சான்றுகளின் அடிப்படையில் அவர்கள் கி.மு 3ஆம் நூற்றாண்டளவில் தமிழத்திற்கு வந்திருக்கலாம் என்று துணியலாம்.
‘நாடோடி இனத்திற்கு தடையற்ற பாலுறவு, விளையாட்டு புத்தி, சிற்றின்ப நாட்டம் ஆகியவை இயல்பு’ என்ற ஜெயஸ்வாலின் கருத்து, சங்க இலக்கியத்தில் உள்ள கலித்தொகை- முல்லைக்கலி பாடல்களில் எதிரொளிப்பதைக் காணலாம்.

அடிக்குறிப்புகள்:

  1. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.14
  2. ஆர்.எஸ். சர்மா, பழங்கால இந்தியாவின் அரசியல் கொள்கைகள் சில தோற்றங்கள்,2010 ப.23.
  3. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.26.
  4. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், 1991, ப.104.
  5. R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System, 1913. p.51.
  6. டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா,2006,ப.207.
  7. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.23
  8. மகாபாரதம், மௌசால பருவம்,  http://prramamurthy1931.blogspot.in/2013/01/mahabharata-mausala-parva.html/23-01-2014.
  9. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107.
  10. பி.வி.ஜகதீச ஐயர், புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்,2009, ப.20 &165.
  11. en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014.
  12. Sudhakar Chattopadhyaya, Evolution of Hindu Sects, 1970, p.72
  13. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.106-107
  14. மேலது, ப.107
  15. en.wikipedia.org/wiki/Abhira_tribe/23-01-2014.
  16. R.G.Bhandarkar, Vaisnavism Saivism and Minor Religious System,1913. p.52.
  17. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.105
  18. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.24.
  19. தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.138.
  20. டி.டி.கோசாம்பி, பண்டைய இந்தியா,2006,ப.256.
  21. மு.இராகவையங்கார், வேளிர் வரலாறு, 2004, ப.45-47.
  22. சி.பி.லோகநாதன், வரலாற்றில் யாதவர்கள்,2001, ப.29
  23. சுவீரா ஜெயஜ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்,1991. ப.107.
  24. தொ.பரமசிவம், பண்பாட்டு அசைவுகள்,2001, ப.139.