Flash குலசாமி கலிங்க கோனாரும்ஆயிரம் வீட்டு இடையர்களும் நடுகல் வழிபாடு பற்றிக் கூறும் சங்க இலக்கியப் பாடல்கள் வரலாற்றை உணர்த்தும் முதன்மைச் சான்றுகளாக கோனார் கல்வெட்டு ஆதரம் ஆயர்கள் பாண்டியர் குடியோடு தோன்றியவர் ஆயனின் செங்கோல் சிறப்பு புறநானூற்றில் ஆயர்கள் அண்டரும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை கிருஷ்ணனும் ஆபீரரும் ஆய்வுக்கட்டுரை தலைவனான தஞ்சை ஒபளநாதன் வேங்கட வாணனுக்கு திருக்கை மலர் (வீசுகவரி ?) தந்து சிறந்தான். “ஓதவளர் வண்மை ஒபளநா தன்தஞ்சை யாதவர்கோன் வாழ இனிதூழி – போத மருக்கலவுஞ் சோலை வேங்கடவா ணர்க்கு கோட்டை மதுரை அழகர் கோவில் மீனாட்சி ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. குலதெய்வம் வழிபாடு யார் தலைவன் அன்பில் செழிந்த முல்லை நிலத்து உடன்பிறப்பே வேலூர் வேலூர் விழுப்புரம் விருதுநகர் மதுரை புதுக்கோட்டை தேனி தூத்துக்குடி திருவண்ணாமலை திருநெல்வேலி தஞ்சாவூர் சேலம் சென்னை சிவகங்கை கோயம்புத்தூர் கடலூர் இராமநாதபுரம்

குலதெய்வம் வழிபாடு

கடந்த காலத்தில் வாழ்ந்தபோது எழுதப்பட்டது!

ம.செந்தமிழன்

அந்த நாட்களில் அவர்கள் பொய்களை நம்புவார்கள், உண்மைகளைச் சந்தேகிப்பார்கள்.

அந்தக் காலம் நன்மைகளுக்கு ஒவ்வாததாகவும், பாவங்களுக்குப் பக்கபலமாகவும் அமையும்.

அவர்கள் தமக்குள் மோதிக்கொள்வார்களே தவிர, சதிகாரர்களுக்கு எதிராக ஒரு கேள்வியையும் எழுப்ப மாட்டார்கள்.

அறிவைக்கொண்டு வளர்த்த தேசங்கள், அறிவால் அழிக்கப்படும். மனதால் கட்டிய இல்லங்கள், மனதால் காக்கப்படும்.

தமது ஊன் பொசுங்கிக் கருகும் வரை, தீயின் வெம்மையை அவர்கள் உணரப் போவதில்லை. தமது குடல் வற்றி வெடிக்கும் வரை, நீரின் தேவையை அவர்கள் அறிவதுமில்லை.

அமுதாகிய மழை நீர் கற்பாறைகளில் ஒட்டாமல் தெறித்துவிழுவதைப் போல, நன்மைகளைப் பேசுவோர் அவர்களிடமிருந்து விலகி நிற்பார்கள்!

உண்மைகளைப் பேசுவோர் அமைதியை போதிப்பார்கள். இவர்களோ, வன்முறைக்காரர்களின் தலைமையை ஆரவாரித்து ஏற்பார்கள்.

புவியெங்கும் நிலம் நடுங்கினாலும், கடல் பொங்கினாலும், நீர் வற்றினாலும், காற்று சுழற்றினாலும், வெம்மை பொசுக்கினாலும் அவர்களது கவனம் செல்வத்தின் மீதே இருக்கும்.

முதலில் செல்வத்தை இழப்பார்கள். பின்னர், உணவையும் நீரையும் இழப்பார்கள்.

ஒரே ஒரு கணம் நின்று நிதானித்து, ‘என்ன நடக்கிறது உண்மையில்?’ எனச் சிந்திப்போர் இறைக் கரங்களால் அரவணைக்கப்படுவார்கள். ஆனால், அவ்வாறு சிந்திக்க விடாதவகையில் குழப்பங்களும் கூச்சல்களும் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

கூச்சல்களின் ஊடாக உண்மையை நாடத் தெரிந்தோர் தப்பிக்கும் வழியைக் கண்டடைகிறார்கள். குழப்பங்களின் ஊடாக தெளிவைக் காணத் தெரிந்தோர், இறைவழியைக் கண்டுகொள்கின்றனர்.

அநீதிகளுக்கு எதிராகப் பேசவும் சிந்திக்கவும் செயல்படவும் அவர்களுக்கு மட்டும் ஆற்றல் இறக்கப்படும்.

பஞ்சம் வந்த ஊரில் கிணறுகளின் மீதுதான் முதல் தாக்குதல் நடக்கும். அட்டூழியங்கள் மிகுந்த அக்காலத்தில், நன்மை பேசுவோரின் அடையாளங்கள்தான் குறிவைக்கப்படும். ஆகவே, அவர்கள் தமது ஆடைகளை அகற்றிவிட்டு அம்மணமாகிறார்கள். அடையாளங்களைத் துறந்துவிட்டு அடைந்துகொள்கிறார்கள்.

அநீதிக்காரர்களின் வார்த்தைகள் ஒருநாளில், அச்சுறுத்தும். மறுநாளில் இன்புறுத்தும்.

நடப்பது நன்மையா தீமையா எனப் புரிந்துகொள்ளாமல், அந்தக் கூட்டம் சிரிக்கும், அழும்.

சுமப்பது பொக்கிசத்தையா பாவச் சுமையையா என்பதே புரியாமல், அந்தக் கூட்டம் குதிக்கும், சறுக்கும்.

சற்றே திரும்பிப் பார்த்தால், துன்பமற்ற பாதைகள் தெரியும். ஆனால், அக்கூட்டத்தின் பெரும்பகுதியினர் திரும்பமாட்டார்கள்.

அந்தக் காலத்தின் இறுதி நாட்கள் நரகத்தின் இறுதியாகவும், சுவர்க்கத்தின் துவக்கமாகவும் அமையும்.

இணைப்புப் படம்: Paul Gregory

கோனார் _கொற்றம்